kalaignarseithigal.com :
டெல்லி
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட
மாணவிகளிடம் போலிஸார் பாலியல் மீறலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை
சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு
தெரிவித்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின்போது மாணவர்களை ஒடுக்க போலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடியடியும் நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த போலிஸார் மற்றும் துணை ராணுவ படையினர் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மட்டுமின்றி, உடல்நல பாதிப்பில் விடுதியில் ஓய்வெடுத்த மாணவர்களையும் டெல்லி போலிஸாரும், துணை ராணுவ படையினரும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களை போலிஸார் கைது செய்து காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருப்பதை அறிந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஜாமீனில் எடுக்கச் சென்றனர். அப்போது போலிஸாரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறிப்பிட்ட நிகழ்வுகளை சவுத்ரி அலி ஜியா கபீர் என்ற வழக்கறிஞர் தனது சமூக வலைதள பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சவுத்ரி அலி ஜியா கபீர் வெளியிட்டுள்ள பதிவில், கல்காஜி போலிஸ் நிலையத்தில் இருக்கும் 35 ஜாமியா மாணவர்களை சந்திக்கச் சென்றோம், சுமார் 8.30 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்த எங்களை போலிஸார் முதலில் உள்ளே அனுமதிக்கவில்லை. நீண்ட வாக்குவாதத்திற்குப் பின்னர் சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தருடன் நாங்கள் இருவர் மட்டுமே செல்ல போலிஸார் அனுமதித்தனர்.
நாங்கள் அங்கு சென்றபோது சுமார் 28 மாணவர்கள் இருந்தனர். அதில் லட்சுமிகாந்த் சிங் என்ற மாணவர் இதய பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருந்து வழங்கப்படவில்லை என்றும் சக மாணவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து எங்களிடம் பேசிய மாணவர்கள், சி.ஆர்.பி.எஃப் மற்றும் டெல்லி போலிஸார் வன்முறையில் ஈடுபட்டதை நூலகம் மற்றும் வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் வெளிப்படுத்தும் என்றார்கள். சி.ஆர்.பி.எஃப் படையினரால் வளாகம் சேதப்படுத்தப்பட்டது என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும், சில பெண்கள், தங்களை போலிஸார் அடித்து துன்புறுத்தியதாகவும், சில ஆண் போலிஸ் அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறினார். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் கழிவறைக்குள் நுழைந்துள்ளனர். மேலும் போலிஸார் உள்ளே வராதபடி, அறையைப் பூட்ட முயன்றனர், ஆனால், கதவுகளை உடைத்து சி.ஆர்.பி.எஃப் படையினர் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், சி.ஆர்.பி.எப் படையினர் மாணவர்களைத் தாக்கத் தொடங்குவதற்கும், மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கும் முன்பு விளக்குகளை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டதாக மாணவிகள் கூறியுள்ளனர். விளக்குகள் எங்கே அணைக்கப்பட்டாலும் பாலியல் துஷ்பிரயோகம் நடக்குமோ என மாணவிகள் அச்சத்தோடு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, சி.சி.டி.வி கேமராக்களில் எந்தவொரு நிகழ்வும் பதிவு செய்யப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக விளக்குகள் அணைக்கப்பட்டன என்றும் ஆனால் சில கேமராக்கள் பாலியல் துஷ்பிரயோகங்களை பதிவு செய்திருக்கும் என்று நம்புகிறோம்” என மாணவர்கள் தெரிவித்தாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் போலிஸார் பாலியல் மீறலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக