சனி, 21 டிசம்பர், 2019

திமுக குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் ஆதி தமிழர் பேரவை கலந்து கொள்கிறது

Thangaraj Gandhi : திமுக தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் நடைபெற
உள்ள குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் ஆதித்தமிழர் பேரவை கலந்து கொள்ளும்./>
மக்களை பாகுபடுத்தி - பிளவுபட வைக்கும் பாசிச சட்டங்களான தேசியப் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி - இஸ்லாமியருக்கும் ஈழத்தமிழருக்கும் துரோகமிழைக்கின்ற பாசிச பார்ப்பனிய பாஜக - அதிமுக அரசுகளுக்கு எதிரான எதிர்ப்புப் பேரணியில் ஆதித்தமிழர் பேரவை பங்கேற்கும் />
குடியுரிமை சட்ட திருத்தமானது இது அடிப்படையிலேயே நமது அரசியல் சாசனம் தந்த அத்தனை வாக்குறுதிகளுக்கும் எதிரானது. மதச் சார்பின்மைக்கு எதிராக யார் கைவைத்தாலும் இந்தியாவின் அடித்தளமே சிதைந்துவிடும் என கருதி இந்திய ஒன்றியத்தில் சமத்துவத்தை தலைநிமிரச் செய்த புரட்சியாளர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களாலும் 1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டம் ஏற்க்கப்பட்டது.

பாஜகவின் மூளையாக விளங்கக் கூடிய RSS யின் நூற்றாண்டுக்குள் இந்து நாடாக மாற்றத் துடிக்கின்ற ஒரு பாசிச நடவடிக்கையான மதச்சார்பின்மைக்கு எதிராக பாகுபடுத்தி பிளவுபட வைக்கும் ஒரு சட்டத்தை அல்ல பல பாசிச சட்டங்களை இவர்களின் அசுர பலம் என நினைத்துக்கொண்டு திணிக்கத் துடிக்கின்றார்கள்.


இவர்களின் பாசிச பார்ப்பனியம். அரசியமைப்பை ஏற்க்காமல் அத்துமீறி சட்டங்களை இயற்ற துடிக்கின்ற நடவடிக்கைகளுக்கு திமுக கூட்டணியில் இருக்கும் நம்முடைய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிற மாநிலமான மேற்கு வங்கம்.கேரளம்.
பஞ்சாப். மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில எம்பிக்களும் தங்களது கண்டங்களையும், சட்டதிருத்ததிற்கு எதிரான வாக்குப் பதிவும் செய்தனர்.
இந்த பாஜகவின் சட்ட அத்துமீறல்களை கண்டு வடக்கு கிழக்கு மத்திய மாநிலங்களில் வசிக்கும் சமூக ஒற்றுமையை விரும்பும் பல்வேறு மாணவர்களும் பொதுமக்களும் போராடியும் வருகின்றனர்.
தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 27 அகதிகள் முகாமில் அடிப்படை கட்டமைப்புகளை முழுமைபடுத்தாமல் வசிக்கின்ற 70 ஆயிரம் ஈழத்(இஸ்லாம் தலித்,கிருத்துவர்,பௌத்தர்) தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்த இந்த பாசிச சட்டத்திற்கு தமிழகத்தின் ஊதுகுழலாக விளங்குகின்ற அதிமுக அரசு மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களித்து நிறைவேற ஒத்துழைத்திருப்பது தமிழர்களுக்குச் செய்யும் மாபெரும் வன்முறை என்றே கருதமுடியும்.
ஆகையால் மதவாத இனவாத கண்ணோட்டத்துடன் புறக்கணிக்கப்படும் மத்திய பாஜக அரசு (NRC - CAB) குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். *நாட்டில் அமைதி நிலவ வேண்டும்* என்ற நல்லெண்ணத்துடனும்,
குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து இந்த திட்டத்தின் படியே செயல்பட்டு ஈழத்தமிழர்களுக்கும் சிறுபான்மை இஸ்ஸாமியருக்கும் துரோகம் இழைத்த மாநில அதிமுக அரசுக்கும் எதிர்ப்பினை தெரிவிக்கின்ற வகையில் வருகின்ற 23-12-2019 அன்று சென்னையில் *திமுக தலைவர் தளபதி* அவர்கள் தலைமையில் நடைபெறும்.
"குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் பெருந்திரளான தோழர்கள் பங்கேற்ப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆதித்தமிழர் பேரவை.
20-12-2019

கருத்துகள் இல்லை: