

பிரம்பு
ஒடிந்தாலும் மீண்டும் மீண்டும் பிரம்பை பிடுங்கி வந்து அஜீஸை கொடூரமாகத்
தாக்கியுள்ளனர். மேலும், வெட்டுக்கத்தியை நெருப்பில் பழுக்கவைத்து
பிறப்புறுப்பு, முகம் உள்ளிட்ட சில பகுதிகளில் சூடு வைத்துள்ளனர்.
தாக்குதலின்போது அஜீஸ் கத்திவிடக் கூடாது என்பதற்காக துணியை வைத்து அவரின்
வாயைப் பொத்தியுள்ளனர்.
காலை
8 மணிக்கு அஜீஸை கட்டிவைத்து தாக்கத் தொடங்கிய டிரைவர்கள் மதியம் 2
மணிக்கு மேலே அவரை விடுத்துள்ளனர். சஜிமோனின் கைப்பை அஜீஸிடம் இல்லை என்பது
தெரிந்த பிறகே அவரை விடுவித்துள்ளனர். தாக்குதலில் குற்றுயிரான நிலையில்
இருந்த அஜீஸ், வீட்டில் இருந்தால் திரும்பிவந்து தாக்குவார்கள் என எண்ணி
அருகில் உள்ள வாழைத் தோப்பில் தஞ்சம் அடைந்துள்ளார். ரத்த வெள்ளத்தில்
அஜீஸ் வாழைத் தோப்பில் இருக்கும்போது தெரு நாய்கள் அவரைத் துரத்தியுள்ளது.
அப்போதுதான்
அங்கிருந்தவர்கள் எங்களுக்குத் தகவல் கொடுத்தனர். வாழைத் தோப்பில் கிடந்த
அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததும் அவர் உயிரிழந்துவிட்டார். அஜீஸை
ஆட்டோ டிரைவர்கள் தாக்கி ஆட்டோவில் ஏற்றிச் செல்வதை உள்ளூர்வாசிகள்
மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவின் அடிப்படையில் விசாரணை
நடத்தியதில் பணத்தைத் தொலைத்த சஜிமோன் ஆட்டோ டிரைவர்கள் ஜினீஷ் வர்கீஸ்,
அருண், சாஜன், சஹாபுதீன் என்ற ஐந்துபேரை கைது செய்துள்ளோம்" எனக்
கூறியுள்ளனர்.
இதற்கிடையே
கொல்லப்பட்ட அஜீஸ் குறித்து சில தகவல்களை அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
``அஜீஸ் இளம் வயதுக்காரர் இன்னும் கல்யாணம்கூட ஆகவில்லை. கான்க்ரீட்
பணிக்குச் சென்றுவந்த இரண்டு ஆண்டுகள் முன்புவரை நன்றாகத்தான் இருந்தார்.
தங்கை மற்றும் தாய் உடன் வாழ்ந்துவந்த அஜீஸ், உடல்நலத்தில் இரண்டு
ஆண்டுகளுக்கு முன் மாற்றம் ஏற்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டதுபோல
நடந்துகொண்ட அவர் உடல் முழுவதும் வர்ணம் பூசிக்கொண்டு காதில் காதணிகளை
அணிந்துகொண்டு தெருக்களில் சுற்றித்திரிந்தார்.

இதனால்
அவரின் தாயும், தங்கையும் அங்கிருந்து வேறுஇடத்துக்குச் சென்றுவிட்டனர்.
அதனால் தனிமையில்தான் எப்போதும் இருந்துவருவார் அஜீஸ். பசித்தால் தம்பானூர்
பஸ் ஸ்டாண்ட் பக்கம் சென்று யாசகம் பெற்று சாப்பிட்டுவந்தார். அங்கு
அடிக்கடி அவரை ஆட்டோ டிரைவர்கள் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது.
அதனால்தான் அவர் திருடியிருக்கலாம் என்று அடித்துள்ளனர். எப்போதும்
அமைதியாகவே இருக்கும் அஜீஸ் இதுவரை எந்தத் திருட்டு சம்பவங்களிலும்
ஈடுபட்டதில்லை" எனக் கூறியுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக