மு சித்திக் : தமிழர்களுக்கு ஆப்படிக்க வருகிறது NRC..
இப்போ நடைமுறையில் நாம் எதிர்த்து கொண்டிருப்பது CAA.
இந்த சட்டதிருத்தின் மூலம் அடுத்து கொண்டுவர இருப்பது NRC..
அதாவது "குடிமக்கள் பதிவேடு". உள்துறை அமைச்சரே வாய்மொழிந்திருக்கிறார்..
இதன் சாராம்சம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள அனைவரும் தான் இந்தியர்கள் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
எப்படி நிரூபிப்பது..?
கீழ்க்கண்ட ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்,
1. நீங்களோ, உங்கள் பெற்றோரோ, அவர்களைப் பெற்றவர்களோ 1947 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தியாவில் பிறந்தவர்களா?
அதை நிரூபிக்க உங்கள் அப்பா/ தாத்தா ஆகியோரின் 1947 ஆம் ஆண்டிற்கு முன்னரான சொத்து ஆவணங்கள்,
அதில் உங்களுக்குரிய பங்கு / உரிமையை நிறுவ வேண்டும் ( 1987 ஆம் வருடத்திற்கு முன் மணமான பெண்களிற்கு பெரும்பாலும் சொத்துரிமை இல்லை )
2. 1950 க்கு பிறகு உங்கள் குடும்பத்தில் பிறந்த அனைவரது பிறப்பு சான்றிதழும் வேண்டும்.
அதாவது உங்கள் அப்பா, அம்மாவிற்கான அரசின் பிறப்புச் சான்றிதழ்,
உங்கள் பிறப்பு சான்றிதழ்
உங்கள் தாத்தா 1947 க்கு பின்னர் பிறந்தவராயின் அவரது சான்றிதழும் வேண்டும்
3.உங்களது அப்பா/ தாத்தா பிறப்புச் சான்றிதழ் அல்லது சொத்து ஆவணம் இல்லையெனில் சொத்துரிமை கொண்ட யாராவது ஒரு உறவினரின் உறவை ஒரு வரைபடமாக வரைந்து ( family tree) அவரது ஒப்புதலோடு ஆணையத்திடம் கொடுக்கலாம்.
4. நீங்கள் 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவராக இருந்து , அப்பா இந்தியரென பிறப்புச் சான்றிதழ் மூலமாகவோ , அல்லது சொத்து ஆவணங்களாலோ நிறுவ முடியவில்லை எனில் உங்கள் இந்தியக் குடியுரிமைத் தகுதி கேள்விக்குரியதாகும். அகதிகள் மூகாமிற்கும் அனுப்பப்படலாம்.
மேல் கூறப்பட்டுள்ள ஆவண விவரம் ஏற்கனவே அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை பதிவேடு நடத்தி முடிக்கபட்ட விவரம்.. இதன் மூலம் பல லட்சம் அஸ்ஸாமிய குடிமக்கள் அகதிகள் முகாம்களில் அடைத்து விட்டனர்.
தமிழர்களுக்கு என்று வரும்போது இன்னும் கூடுதல் நெருக்கடிகள் தரப்படலாம்..
இப்போ இந்துவாகவே இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கிடையாது என முன்பே திட்டமிட்டு தெளிவாக அறிவித்துவிட்டார்கள்.
ஈழத்தமிழர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரே வேறுபாடு நிகழ்காலத்தில் நம்மிடம் உள்ள இந்திய ஆவணங்கள் மட்டுமே.
1940, 50 களின் ஆவணம் கண்டிப்பாக பல தமிழர்களிடம் இருக்க போவதில்லை.
அப்படி ஆவணம் இல்லாத நிலையில் நாமும், ஈழத்தமிழர்களும் ஒரே வரையறையில் வந்துவிடுவோம்.
நம்மை ஈழத்தமிழர் என தாராளமாக சந்தேகிக்க அனுமதியுண்டு.
அஸ்ஸாமியர்களுக்காவது இந்து என்று சொல்லி தப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் தமிழர்களுக்கு அந்த வாய்ப்பும் கிடையாது..
முதலாவது தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியவில்லை என்ற வஞ்சகத்தை பல வழிகளிலும் காட்டிக் கொண்டே இருக்கிறது.
நமக்கு குடியுரிமை, ஓட்டுரிமை இல்லையென்றால் சுலபமாக தமிழகத்தை பிடித்து விடலாம்..
இரண்டாவது நம் கடல் வளம் (சாகர்மாலா), நிலவளம்(மீத்தேன்), மலை (நியூட்ரினோ) வளங்களை களவாட பல ஆண்டுகளாகவே திட்டம் தீட்டி தான் வருகிறது.
அதற்கு தடையாக இருப்பது நாம் மட்டும் தான், மக்கள் மட்டும் தான்.
ஒரே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு வேண்டி 13 அப்பாவி தமிழர்களின் உயிர்களை பலியிட துணிந்த மத்திய பாஜக அரசுக்கு பல லட்சம் கோடிகளுக்கு கதவு திறக்கும்போது விடுவார்களா..??
மக்களா..?? பணமா..?? என்றால் மோடியும், அமீத்ஷா வும் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்...
போதிய ஆவணம் இல்லை என்று, நம்மையும் ஈழத்தமிழர்கள் என முத்திரை குத்தி சுலபமாக அகதிகளாக்கி விடுவர்..
இந்த CAA யை எதிர்த்து போரிட்டு நிறுத்தாவிட்டால் நமக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது..
மு சித்திக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக