Shyamsundar - tamil.oneindia.com :
சென்னை:
ஸ்டாலின் பேட்டி
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சட்டம் வந்தால் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். நாடு முழுக்க பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்.
சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையில் அதிமுக இரட்டை வேடம் – மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் பேட்டி இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும்.
நாளை நடக்கும் போராட்டத்தில் குடியுரிமை சட்டத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம். இந்த சட்டத்தின் பின்னணியை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என்ன உண்மை மக்களுக்கு உண்மையை எடுத்து கூறுவோம்.
இலங்கையில் பௌத்த மதவாதிகளால் தமிழ் இந்துக்களும், இஸ்லாமியர்களும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.ஈழ தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கும் கடமையை செய்ய திமுக எப்போதும் தயங்காது. பாஜக பிரச்சாரம் இந்துக்கள் இந்துக்கள் என்று பாஜக பிரச்சாரம் செய்கிறது. ஆனால் தமிழர்களை பாஜக இந்துக்களாக கூட மதிப்பு இல்லை. அப்படி இருக்கையில் தமிழர்கள் எப்படி இந்த சட்டத்திற்கு ஆதரவு அளிப்பார்கள். கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் குடியுரிமைச் சட்டத்தை ஏன் மாற்ற வேண்டும்?
அவசர தேவை இதை திருத்துவதற்கு அவசர தேவை என்ன?. அதிமுக இதற்கு எதிராக வாக்களித்து இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ஆனால் அதிமுக தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறது , என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக