புதன், 18 டிசம்பர், 2019

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் அனைத்து தலைவர்களும்.. கமலஹாசன் உட்பட


தினகரன் : சென்னை: சென்னை பல்கலை. மாணவர்கள் போராட்டத்துக்கு நேரில் சென்று தனது ஆதரவை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகினறனர். இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலீஸ் நடத்திய தடியடியை கண்டித்தும் மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்த போதிலும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் மாணவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.


மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: போராடும் 800 மாணவர்களுக்கு உணவுக்கு வழியில்லை. மாணவர்களை அகதிகளாக மாற்றி வருகிறார்கள். மாணவர்கள் போராட்டம் பற்றி அரசு கவலைப்படவில்லை. மேலும் சட்டங்கள் மக்களுக்கு பயன்படாவிட்டால் அவை மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஐரோப்பாவில் நிகழ்ந்த சர்வாதிகாரத்தை வரி பிசகாமல் இங்கு மறுபதிவு செய்கிறார்கள். குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என கமல்ஹாசன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: