செவ்வாய், 13 ஜூலை, 2010

NGO,சுனாமி நிதி் பல மில்லியன் டாலர்கள் புலிகள் கொள்ளை

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி நிவாரண நிதியாக பெற்றுக் கொண்ட பெரும் தொகைப் பணத்தை வீணடித்து விட்டன என்று ஆர்எம்ஐரி என்ற ஆய்வு நிலையம் மற்றும் மெல்போர்ன் மொனாஷ் பல்கலைக்கழகங்கள், இலங்கையிலுள்ள கொழும்பு பல்கலைக்கழகம், இந்தியாவிலுள்ள சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்டு ஒஸ்எயிட் எனும் அவுஸ்திரேலிய அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்ககப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் மட்டும் 500 க்கும் அதிகமான தன்னார்வ நிறுவனங்கள் செயல்பட்டன எனற போதிலும் 14 நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேரை பலிகொண்ட சுனாமிப் பேரழிவு போன்ற பாரிய அழிவுகளின் போது மீட்புப் பணியை மேற்கொள்ளக் கூடிய அனுபவம் பல நிறுவனங்களுக்கு இருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிர்மாணிக்கப்பட்ட சில புகலிடங்களில் நான்கு வருடங்கள் வரை குடும்பங்கள் வாழ்ந்து வந்ததால் தற்காலிக வீடுகளை கட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருத்தல் வேண்டும் என்று இந்த 385 பக்க அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பத்திரிகை தெரிவித்துள்ளது.

அரசாங்கங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சுனாமியிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை முழுமையாக கிரகித்து வைத்திருக்காவிட்டால் மீண்டும் அதே தவறை புரிந்து ஏராளமான உலக உதவிப் பணத்தை வீணடித்து விடும் என்று ஆர்எம்ஐரியின் உலகளாவிய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் மார்ட்டின் முலிகனும் அறிக்கையின் இணை ஆசிரியை யசோ நடராஜாவும் தமதுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச தன்னõவ நிறுவனங்களின் உதவித் தொகைகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூர் சமுதாயக் குழுக்களுடன் உறுதியாக இணைந்து செயல்பட்டதையும் இவர்கள் சுட்டிக் காட்டியுள்ளõர்கள். ஆனால் பல உதவி நிறுவனங்கள் அவசர அவசரமாகவும் ஒன்றோடொன்று போட்டியாகவும் செயல்பட்டதால் பெரும் தொகையான சுனாமி உதவிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். தரம்
குறைந்த நிர்மாணப் பணிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் பல நிறுவனங்கள் அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்தன என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
நாம் கூறுகின்றோம்....
இலங்கையில் 2004 ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டவுடன் புலம்பெயர் நாடுகளில் பெருமளவு நிவாரண நிதிகள் சேகரிக்கப்பட்டன. புலம்பெயர் நாடுகளில் உள்ள வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது வழமையான ஒலி, ஒளிபரப்புகளை இடைநிறுத்தி விசேட ஒலி, ஒளிபரப்புக்களை சுனாமி நிதியைச் சேகரிக்கும் முகமாக கிழமைக் கணக்கில் மேற்கொண்டன. மக்களும் தமது உறவுகள் பாதிக்கப்பட்டு விட்டனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நியாயமான ஆர்வக் கோளாறு காரணமாக தொலைபேசியில் அழைத்து பணக்குவியலை வழங்கினர். அன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் சகல தமிழ் ஒலி ஒளிபரப்பு ஊடகங்களும் புலிகளின் கட்டுப்பாட்டில் அல்லது (சொ)ல்வாக்கில் இருந்தன. சுனாமியினால் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.
புலம் பெயர் நாடுகளில் சேகரிக்கப்பட்ட பல மில்லியன் டாலர்கள் புலிகள் அமைப்பிடமே கொடுக்கப்பட்டது, (புலிகளின் பினாமி அமைப்பு என்று அழைப்பதை விட புலி அமைப்புக்கள் என்று அழைப்பதுவே சாலப் பொருத்தமானது). இவ் நிதிகள் வடக்கு கிழக்கு இற்கு புலிகளுக்கே அனுப்பப்பட்டன. (வடக்கு கிழக்கில் பொது அமைப்புக்கள் என்று காட்டப்பட்டாலும் அன்றைய கால கட்டத்தில் இவை புலி அமைப்புக்களாகவே செயற்பட்டன. இதில் ரிஆர்ஓ முக்கியமானது. சில சர்வதேச தன்னார்வு அமைப்புககள் செயற்பாட்டாலும் இதன் ஊழியர்கள் வடக்கு கிழக்கு தமிழர்களே பெரிதும் வேலை செய்தனர். இவர்கள் நிச்சயமாக புலிகளின் ஆட்களாகவே செயற்பட்டிருக்க முடியும். அன்றேல் அன்றே மண்ணோடு மண்ணாக போய் இருப்பார்கள். ஒட்டு மொத்தமாக பார்த்தால் புலிகளால் பொது மக்களின் உண்மையான உணர்வுகள் ஏமாற்றப்பட்டு கொள்ளளையடிக்கப்பட்ட பணம் புலிகளிடமே ஒப்படைக்கப்பட்டு வீணடிகப்பட்டதே இலங்கையில் தமிழ் பகுதி சுனாமி நிதிக்கு நடைபெற்றது.
இவை எல்லாவற்றையும் விட சர்சதேச, ஏன் உள்ளுர் தன்னார்வ நிறுவனங்களின் இயக்குனர்கள் மிகச்சில ஊழியர்கள் தவிர்ந்த ஏனையோர் இவற்றில் இணைந்து வேலை செய்வதே உதவித் தொகையை கொள்ளையடிப்பதற்காகவே. கூடவே தமது மேலத்தேய எசமானர்களுக்கு தகவல் வழங்குவதற்காகவும். இதற்காக இடையிடையே நிவாரணம் என்ற பெயரில் கிள்ளித் தெளிப்பார்கள் மக்களுக்கு. இதில் ஏமாறுவது உதவி வழங்கும் பல ஆயிரம் பொது மக்களும் உதவியை எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுமும் ஆவர். புலிகளின் யுத்தத்திற்கு பல மில்லியன் டாலர்கள் பொது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டது இவ் வழிகளிலும் ஆகும். பொது மக்களே சிந்தியுங்கள் இனிமேலாவது. நிவாரணங்கள், நிவாரணம் தேவையான மக்களை சென்றடையக் கூடிய முறமைகளை சற்று நிதானித்து சிந்தித்து கண்டு பிடித்து முறையான ஊடகத்தினூடு மக்களை சென்றடையச் செய்யுங்கள். நீங்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.
அதே வேளை இலங்கை உட்பட அவ் அவ் நாடுகளில் ஆளும் வர்க்கமும் தனது கை வரிசையை இவ் நிவாரண நிதியில் காட்டியே வந்திருக்கின்றன. என்ன இலங்கையில் தமிழர்கள் சிங்கள் அரசு செய்தார்கள் என்று சற்று ஆர்வத்துடன் குற்றம் சாட்டுவார்கள். மற்றபடி வீட்டுக்கு விடு வாசல்படிதான்.
இவ்விடத்தில் இன்னொற்றையும் குறிபிட்டாக வேண்டும். கிழக்கில் சுனாமியால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதும் கிழக்கின் எல்லைக் கிராமங்களில் வசித்து வந்த சிங்கள் மக்கள் கடகங்களில் நிவாரணப் பொருட்களை நிறைத்து கிழக்கில் உள்ள பல தமிழ் கிராமங்களுக்கு கால் நடையாக சுமந்து வந்து நிவாணப்பணிகளில் ஈடபட்டதை சகோரத்துவத்துடன் நினைவும் கூறியே ஆக வேண்டும். நாம் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்கள கிராமத்திற்கு கடகங்கள் காவிய வரலாற்றை தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும்?
(சாகரன்)(((

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சில சர்வதேச தன்னார்வு அமைப்புககள் செயற்பாட்டாலும் இதன் ஊழியர்கள் வடக்கு கிழக்கு தமிழர்களே பெரிதும் வேலை செய்தனர். இவர்கள் நிச்சயமாக புலிகளின் ஆட்களாகவே செயற்பட்டிருக்க முடியும். அன்றேல் அன்றே மண்ணோடு மண்ணாக போய் இருப்பார்கள்.

அன்றேல் அன்றே மண்ணோடு மண்ணாக போய் இருப்பார்கள்.

என்ன இலங்கையில் தமிழர்கள் சிங்கள் அரசு செய்தார்கள் என்று சற்று ஆர்வத்துடன் குற்றம் சாட்டுவார்கள். மற்றபடி வீட்டுக்கு விடு வாசல்படிதான்.

இவ்விடத்தில் இன்னொற்றையும் குறிபிட்டாக வேண்டும். கிழக்கில் சுனாமியால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதும் கிழக்கின் எல்லைக் கிராமங்களில் வசித்து வந்த சிங்கள் மக்கள் கடகங்களில் நிவாரணப் பொருட்களை நிறைத்து கிழக்கில் உள்ள பல தமிழ் கிராமங்களுக்கு கால் நடையாக சுமந்து வந்து நிவாணப்பணிகளில் ஈடபட்டதை சகோரத்துவத்துடன் நினைவும் கூறியே ஆக வேண்டும். நாம் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்கள கிராமத்திற்கு கடகங்கள் காவிய வரலாற்றை தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும்?