செவ்வாய், 13 ஜூலை, 2010

குடும்ப அராஜக ஆட்சி - நொறுங்கி போன மக்கள்; கோவையில் ஜெ., ஆவேசம்

அப்பா முதல்வர், மகன் துணை முதல்வர், பெரியமகன் மத்திய அமைச்சர், மகள் எம்.பி., மகனின் நண்பர்கள் சிலருக்கு மத்திய அமைச்சர் பதவி இவ்வாறு சர்வாதிகாரி ஆட்சியில் கூட பதவிகள் பங்கு போட்டது இல்லை

கோவை: ஒரு ரூபாய்க்கு இலவச அரிசி கொடுத்துவிட்டு ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திய தி.மு.க., அரசை ஆட்சியில் இருந்து விரட்டுவதற்கு அ.தி.மு.க., வினரும், பொதுமக்களும் தயாராகுங்கள் என விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., பேசுகையில், குறிப்பிட்டார்.


பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் பொதுக்கூட்டம் மற்றும், ஆர்ப்பாட்டம் ஜெ., தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்றார். தலைமை கழக செயலர் செங்கோட்டையன் உள்பட பலர் பங்கேற்றனர். ஜெ., தலைமையில் ஆர்ப்பாட்டம் என்பதால்  பலர் திரண்டனர்.


பொதுக்கூட்டத்தில் ஜெ., பேசியதாவது: கடந்த காலங்களில் 10 சதவீதம் விலை உயர்வு ஏற்பட்டதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சில்லரை விற்பனைக்கு வந்து மக்ககள் கைக்கு சேரும்போது 35 சதவீத உயர்வு பெறுகிறது. இதற்கு ஆன்லைன் வர்த்தகமும், அரசின் நடவடிக்கையும்தான் காரணம்.


மின் உற்பத்தி என்னாச்சு ? : கருணாநிதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறார். ஆனால் இந்த உணவு சமைத்து சாப்பிட தேவையான மளிகை பொருட்கள், காய்கறி, மண்ணெண்ணெய் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு கருணாநிதி மக்களை ஏமாற்றுகிறார். மின் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் தொழில் உற்பத்தி பாதிப்படைந்துள்ளன. மின் உற்பத்தியை பெருக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தொழில் நசிவடைந்துள்ளன. வேலை வாய்ப்பு குறைந்து விட்டது.


போலி மருந்து- போலி மது : தமிழக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி, அமராவதி, காவிரியில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனை அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் பங்கு போட்டு கொள்ளையடிக்கின்றனர். மதுபான கடைகளில் ஒவ்வொரு கடைகளிலும், ஒவ்வொரு விலை விற்கப்படுகிறது. போலியான மது, போலியான, காலாவதி மாத்திரை விற்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் காரணமான துணை முதல்வர் ஸ்டாலினின் மருமகனுக்கு விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


இலவச கலர் டி .வி ., வழங்கினார்கள், ( வழங்கினார்களா என கூட்டத்தினரை பார்த்து கேட்டார் ) ஆமாம் என்றனர் கூட்டத்தினர். இந்த இலவச டி. வி ., மூலம் கேபிள் வருமானத்தை பெருக்கி அவர்களது குடும்பத்தினர் வளமாகியுள்ளனர்.


யார் ? யாருக்கு என்ன பதவி ? : அப்பா முதல்வர், மகன் துணை முதல்வர், பெரியமகன் மத்திய அமைச்சர், மகள் எம்.பி., மகனின் நண்பர்கள் சிலருக்கு மத்திய அமைச்சர் பதவி இவ்வாறு சர்வாதிகாரி ஆட்சியில் கூட பதவிகள் பங்கு போட்டது இல்லை. இப்படி ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகுங்கள், செம்மொழி மாநாடு நடத்தி கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. கூட்டணி உண்டு கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். கருணாநிதியின் கொட்டத்தை நீங்கள் அடக்குங்கள், அடக்குவோம் இவ்வாறு ஜெ., பேசினார்.தொடர்ந்து கூட்ட மேடையில் இருந்த படி ஆர்ப்பாட்டம் செய்தார். ஜெ., இவர் மைக்கில் சொல்ல, சொல்ல, தொண்டர்கள் கோஷங்களை கூறினர். இந்த கோஷத்தின்போது தமிழக மக்கள் விரும்பும் அ.தி.மு.க., ஆட்சி அமையப்போகுது என்றும்,  கருணாநிதியே ஆட்சியை விட்டு ஓடி விடு என்றார்.ஆர்ப்பாட்டத்தில் ஜெ., போட்ட கோஷங்கள் என்ன ? : ஜெ., மைக்கில் உரக்க சொல்ல, தொண்டர்கள் பின்னே தொடர்ந்து கோஷமிட்டனர். இதில் ஜெ., போட்ட கோஷங்கள் வருமாறு: உயர்ந்து போச்சு, உயர்ந்து போச்சு நூல் விலை உயர்ந்து போச்சு, மின்வெட்டு, மின்வெட்டு, குறைந்து போச்சு, குறைந்து போச்சு, வேளாண் உற்பத்தி குறைந்து போச்சு, பெருகி போச்சு , பெருகி போச்சு , வேலைஇல்லா திண்டாட்டம் பெருகி போச்சு, சுரண்டாதே, சுரண்டாதே கனிமவளத்தை சுரண்டாதே, கைது செய், கைது செய், காலாவதியான மருந்து வழக்கில் தொடர்புடைய ஸ்டாலின் மருமகனை கைது செய், விற்காதே, விற்காதே காலவதியான உணவு பொருட்களை விற்காதே, விளையாடாதே, விளையாடாதே, மக்கள் உயிரோடு விளையாடாதே,தாரை வார்க்காதே ,தாரை வார்க்காதே , தமிழக நதி நீர் உரிமைகளை தாரை வார்க்காதே, பரவுதே, பரவுதே புதுபுதுப்புது நோய் பரவுதே, கட்டுப்படுத்து, பாதுகாப்பு கொடு , பாதுகாப்பு கொடு, ரவுடிகளிடம் இருந்து பாதுகாப்பு கொடு, கருணாநிதியே வெட்கமில்லையா, வெட்கமே இல்லையா, மக்களுக்கு போதிய பாதுகாப்பு கொடு , கொடுக்க முடியாவிட்டால், ஆட்சியை விட்டு ஓடி விடு, வெல்லப்போகுது வெல்லப்போகுது ஜனநாயகம் மீண்டும் வெல்லப்போகுது, அழியப்போகுது, அழியப்போகுது, அராஜக ஆட்சி அழியப்போகுது, மலரப்போகுது, மலரப்போகுது, மக்கள் ஆட்சி மலரப்போகுது, ஒழியட்டும், ஒழியட்டும், குடும்ப அராஜக ஆட்சி ஒழியட்டும், சபதமேற்போம், சபதமேற்போம், புரட்சி தலைவர் ஆட்சி அமைய சபதமேற்போம்,
chennai,இந்தியா
2010-07-13 17:49:13 IST
பச்சை அம்மா, கொஞ்சம் அடக்கிவாசிங்க, நீங்க போட்ட ஆட்டம் எல்லாம் மறந்து போச்சா. அதன் உனக்கு தமிழ் மக்கள் வைத்தார்களே ஆப்பு
 
பாஸ்கர் - coimbatore,இந்தியா
2010-07-13 17:14:03 IST
அட லூசுங்களா , மொத்த தமிழ் நாட்டோட அதிமுக காரங்களே இவ்வளவுதான், இதை வச்சிக்கிட்டு ஒன்னும் புடுங்க முடியாது ,கோயம்புத்தூர் காரங்கல்லாம் அவனவன் வேலைக்கு போய்ட்டாங்க, வந்தவனெல்லாம் பிரியாணிக்கும் பிராந்திக்கும் வந்தவணுங்க. அந்தம்மாவுக்கு போர் அடிசுருக்கும் அதான் கொடநாடு போற வழியில அப்படியே வந்துட்டு போயிருக்கு,... 
 
2010-07-13 17:12:20 IST
எப்படியும் தமிழ் நாடு உருப்பட போவது கிடையாது. இதில் யார் ஆட்சிக்கு வந்தா என்ன... 
சங்கர்.ப - தேனி,இந்தியா
2010-07-13 17:09:35 IST
என்னவோ உண்மைதான். ஆனால் முழக்கமிடும் நபர்தான் சரியில்லை, பிறகு இவர் முன்னே செய்த லீலைகளும் யாராலும் முழக்கம் இடப்படும்...என்னா செய்றது.....
சதீஷ் - jakarta,இந்தியா
2010-07-13 16:59:16 IST
என்ன பண்றது பெரியவருக்கு பெரிய குடும்பம் சொத்து குவிக்கிறாரு . உனக்கு யாருமே இல்ல. ஆனா நீயும் அப்படித்தான். இதுல யாரு பைத்தியம் நாங்கதான். எங்கள மாதிரி பைத்தியம் இருக்குற வரைக்கும் உங்கள போல பைத்தியம் திருந்துமா என்ன. அது கடவுளுக்கே தெரியாது ....
குரங்கு - Banfalore,இந்தியா
2010-07-13 16:53:48 IST
சீன் முடிஞ்சுது.. பேக் டு கொடநாடு.....
அருண் குமார் - Periyakulam,இந்தியா
2010-07-13 16:52:12 IST
அம்மா நீ உன் காரியம் நடக்கணும்னு என்ன வேணாம்னாலும் பேச கூடாது. நீங்க சொத்து சம்பாதிக்க என்ன வேணும்னாலும் சொல்றீங்க, நீங்க வந்தாலும் இது தான் நடக்க போகுது. போ மம்மி போய் ரெஸ்ட் எடு. பேசாம நீங்களும் திமுகவில் சேர்ந்து விடலாமே... 
அன்பு - chennai,இந்தியா
2010-07-13 16:40:21 IST
எங்கே நம்ம அடுத்த முதல்வர் ராமதாசே காணோமே?? பார்த்து ரொம்ப நாளாச்சே. ஒரு வேளை துபாய்க்கு போயிட்டாரா??... 
B .சந்தர் - Hanoi,வாலிஸ் புட்டுனா
2010-07-13 16:30:39 IST
ஆணவம், அராஜகம், சர்வாதிகாரத்தனம் உங்களக்கு கைவந்த கலை, தருமபுரி பஸ் எரிப்பு, சென்னா ரெட்டி மிரட்டல் இன்னும் பல பல அட்டூழியங்கள் உங்களுக்கு மறந்து விட்டதா பச்சை அம்மா? உங்கள் காமெடி பேச்சுக்கு அளவே இல்லையா? நீங்கள் சொல்வது மாதிரி கலைஞர் சர்வதிகாரி என்றால், இதே மாதிரி மாபெரும் மாநாடு (உண்மையாகவா அல்லது கோர்ட்டர் பிரியாணி கோஷ்டியா?) நடக்க விட்டிருப்பாரா? உங்களை அந்த ஆண்டவனே வந்தாலும் திருத்த முடியாது.... 
tamilkader - dammam,செனகல்
2010-07-13 16:20:37 IST
ஆமா அம்மையார் ஆட்சியில் பாலாரும் தேனாறும் ஓடியதோ. கம்யூனிஸ்ட் -கள் ஒவ்வொரு ஆட்சியின் இறுதி மாதங்களில் அந்த அரசை ஒழிப்போம் என்று எதிர் அணியில் இணைந்து பச்சோந்தி அரசியல் செய்கின்றனர்....
சேட் அன்வர் BHASHA - CHENNAI,இந்தியா
2010-07-13 16:19:37 IST
அம்மாவை பார்த்த ரொம்ப பாவமா இருக்கு. இவங்க ஆட்சி லே ERUNDHAPPO விலைவாசி ஏறவே இல்லியே என்ன? VITTAA இப்பவே கோட்டையில் உட்கார்ந்துடுவாங்க போலே இருக்கே! மக்கள் தான் நல்ல முடிவு EDUKKANUM... 
சாமி - bangkok,டோகோ
2010-07-13 15:29:39 IST
நீங்க சொன்ன உடனே! இப்ப மக்கள் எல்லாம் நம்பிட்டாங்க!பாருங்க தமிழ் நாட்டுல எல்லாரும் உங்க பின்னாடி அணி திரண்டு வர போறாங்க! நீங்க எதிர் கட்சியா இருந்து செஞ்ச சேவையில எல்லா மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்துல மூழ்கி போய்டாங்க! கைய குடுத்து தூக்கி உடுங்க. போய் சேர்ந்துட போறாங்க! கூட்டனிய நீங்க பாத்துக்க போறீங்க. அப்போ மக்கள் உங்க கூட்டனிய பாக்க வேண்டாம்னு சொல்றிங்க. அதுவும் சரிதான். அடுத்த வருடம் தெரிஞ்சுடும்....

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஏதோ இந்தம்மா காலத்துல எல்லாம் நல்ல படியா நடந்த மாதிரி. க்கும்.