வெள்ளி, 16 ஜூலை, 2010

ஜனாதிபதி, ஏ-9 வீதியின் இரு மருங்கிலும் பழுதடைந்து காணப்படும் கட்டடங்களை உடனடியாக புனரமைக்குமாறு

ஏ-9 வீதியின் இரு மருங்கிலும் பழுதடைந்து காணப்படும் கட்டடங்களை உடனடியாக புனரமைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கின் வசந்தம் செயலணிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சில அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்த கட்டடங்களை புகைப்படமெடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பெருமளவு பணமீட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சி கிராமங்களில் உள்ள கட்டடங்கள் புனரமைக்கப்பட்டுள்ள போதிலும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் பழுதடைந்த கட்டடங்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் புனரமைப்பதற்கு தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் இந்திய உதவியுடன் 50,000 வீடுகள் அமைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: