புதன், 14 ஜூலை, 2010

ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரிட்ஜ்போர்ட் நகரில் மளிகைக் கடை ஒன்றில் நடந்த மோதலில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது பெயர் அருண் குமார் நரோத். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். பிரிட்ஜ்போர்ட்டில் படித்து வருகிறார். அங்குள்ள மளிகை நிறுவனத்தில் பகுதி நேர வேலை பார்த்து வந்தார்.

திங்கள்கிழமை இரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பணத்தை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர். அப்போது அவர்கள் நரோத்தை சுட்டு விட்டுத் தப்பினர். இதில் தலையில் குண்டு பாய்ந்து நரோத் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

கம்ப்யூட்டர் என்ஜீனியரிங் படித்து வந்தார் அருண்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: