வெள்ளி, 16 ஜூலை, 2010

20 வீதமான நிலக்கண்ணி வெடிகளே இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக

20 வீதமான நிலக்கண்ணி வெடிகளே இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் மொத்தமாக 1.5மில்லியன் கண்ணி வெடிகள் புதைக்கபட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதில், அடையாளம் காணப்பட்ட 640 இடங்களிலிருந்து 266000 கண்ணி வெடிகளே இதுவரையில் அகற்றப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், அகற்றப்பட்ட நிலக்கண்ணி வெடிகளில் 90 வீதமானவை இலங்கை இராணுவத்தினால் அகற்றப்பட்டவை என்பதுடன் தொடர்ந்தும் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என கூறியுள்ளார். சமாதான முனைப்புக்கள் தோல்வியடைந்த பின்னரே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது-ஜனாதிபதி- சமாதான முனைப்புக்கள் தோல்வியடைந்த பின்னரே புலிகளுடன் யுத்தம் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய இன்பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வினை முன்வைப்பதற்கு அரசாங்கம் எடுத்த சகல முனைப்புக்களையும் புலிகள் நிராகரித்த காரணமாகவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது என்பதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புலிகள் பேச்சுவார்த்தைகளை ஏற்றுக் கொண்டிருந்தால் கிளிநொச்சியில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனினும், பயங்கரவாதிகள் சமாதான முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் காணமாக வடக்கு மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடபகுதி ரயில் பாதையை , கிளிநொச்சி வைத்தியசாலையை யார் தாக்கி அழித்தார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கின் முக்கியமான நிலைகள்மீது புலிகளே தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கர்ப்பிணித் தாய்மார், தமிழ் புத்திஜீவிகள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களை புலிகள் கடந்த காலங்களில் படுகொலை செய்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: