செவ்வாய், 13 ஜூலை, 2010

முறைகேடுகள்,மேல் மாகாணத்தில் அதிபர்கள் 7 பேர் இதுவரை பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக

மேல் மாகாணத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக அரசாங்க பாடசாலைகளின் அதிபர்கள் 7 பேர் இதுவரை பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை கல்வித் திணைக்களத்தின் செயலாளர் ஜயந்தி விஜேதுங்க சற்று முன்னர் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொழும்பு மாவட்டத்தில் இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடும் அதிபர்கள் சிலரை நாம் இனங்கண்டுள்ளோம். அவர்களுக்கெதிராக வெகுவிரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுமதிக்கும் போது இது தொடர்பாக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். தமது பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இது குறித்து சில பெற்றோர்கள் அக்கறை கொள்வதில்லை.இதனால் இவ்வாறான முறைகேடுகளை முற்றாக ஒழிக்க முடியாதுள்ளது” என்றார்.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் அதிபர்கள் தொடர்பாக உடனடியாக கல்வித் திணைக்களத்திற்கு அறியத்தரும்படி கல்வித் திணைக்களம் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

கருத்துகள் இல்லை: