புதன், 14 ஜூலை, 2010

இழப்பீட்டை நடிகர் விஜய் தரும் வரை அவரது படங்களுக்கு ஒத்துழைப்பு

தொடர் தோல்விகளுக்குரிய இழப்பீட்டை நடிகர் விஜய் தரும் வரை அவரது படங்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரோகிணி ஆர்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில்,

விஜய் நடித்த குருவி, வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா ஆகிய 5 படங்கள் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த படங்களுக்காக திரையரங்க உரிமையாளர்கள் கொடுத்த பணத்தில், 35 சதவீத தொகையை விஜய் திருப்பி தர வேண்டும் என்று ஏற்கனவே கேட்டு இருந்தோம். இதுவரை விஜய் திருப்பி தரவில்லை. அவர் நஷ்ட ஈடு தொகையை தரும் வரை, அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதவிர உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டை நடத்திய முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்தும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி ராம.நாராயணன் அணியினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 14 Jul 2010 6:58 pm
பொழுது போக்குக்கு முக்யத்துவம் கொடுத்து அவனை நாளைய தலைவன் ஆகாதீர்கள்

கருத்துகள் இல்லை: