புதன், 14 ஜூலை, 2010

சத்யா, பாக்யாஞ்சலி வாயில் போட்ட வெற்றிலையை நாசூக்காக எடுத்துக் கடித்து

முத்தக் காட்சிகளில் நடிக்க மிரளும், நடித்த பின்னர் கதறியழும் புதுமுக நடிகைகளுக்கு மத்தியில், சற்றும் அச்சப்படாமல் அசத்தலான ஒரு முத்தக் காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார் நெல்லு பட நாயகி பாக்யாஞ்சலி.

முத்தக் காட்சிகளை இப்போதெல்லாம் விதம் விதமாக எடுக்கிறார்கள். ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து காட்சிகளை செட் செய்கிறார்கள். வாயை எப்படியெல்லாம் முத்தம் கொடுக்க யூஸ் பண்ணலாம் என்று மூளையை யூஸ் செய்து யோசித்து யோசித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நடிகையின் கன்னத்தை வெறி கொண்டு நாயகன் கடிப்பது போல காட்சி வைத்து அந்த நடிகையை கொடுமைப்படுத்தினர். இப்படி பலப் பல முத்தக் காட்சிகளை எடுத்து கோலிவுட்டில் சத்தமில்லாமல் ஒரு முத்தப் புரட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வரிசையில் நாயகியின் வாயில் வெற்றிலையைக் கொடுத்து அவரைக்கு குதப்ப வைத்து, அந்த வெற்றிலைச் சாற்றை நாயகன் எடுத்து சாப்பிடுவது போல (இன்னா மாதிரி கற்பனை நைனா..!) ஒரு காட்சியை செட் செய்தனர். வெற்றிலைய எடுத்து சாப்பிட்டபடியே உதடுகளை நாயகன் கவ்விக் கொள்வதாகவும் அந்த காட்சியை டெவலப் செய்துள்ளனர்.

இப்படி சீனை யோசித்து விட்டு நாயகி பாக்யாஞ்சலியிடம் போய்க் கூற முதலில் அவர் ஒரு செகன்ட் யோசித்துள்ளார் (அடுத்த செகன்ட் அவரது எதிர்காலம் குறித்து யோசித்திருப்பாரோ, என்னவோ..) 3வது செகன்ட்டில் ஓ.கே.சார் என்று இயக்குநரிடம் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து நாயகன் சத்யா, பாக்யாஞ்சலி வாயில் போட்ட வெற்றிலையை நாசூக்காக எடுத்துக் கடித்து தனது வாய்க்குகள் ஷிப்ட் பண்ணி, உதடுகளையும் கவ்வி முடித்து காட்சியை சிறப்பித்தாராம்.

இந்த முத்தக் காட்சியில் நடித்தபோது பாக்யாஞ்சலி முகம் சுளிக்காமல், நடித்துக் கொடுத்தாராம். நடிப்பில் இதுவும் ஒரு அங்கம் என்றும் கூறினாராம்.

பாக்யாவின் பூர்வீகத்தை சொல்லவில்லையே?, வழக்கம் போல கேரளத்து 'காம்ப்ளான்'தான்!

கருத்துகள் இல்லை: