வெள்ளி, 16 ஜூலை, 2010

வீராங்கனை சாந்தியை(28) ஞாபகம் இருக்கிறதா? அவர் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர்

மும்பை : ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வாங்கிய வீராங்கனை சாந்தியை(28) ஞாபகம் இருக்கிறதா? அவர் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்ற பிரச்னையில், அவர் விளையாடுவதற்கான தடை இன்னும் நீடிக்கிறது. ஆனால், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த கேஸ்டர் செமன்யா(21) மீதான தடை நீக்கப்பட்டு, அவர் விளையாட்டில் பங்கேற்க அனுமதியும் பெற்று விட்டார்.
தமிழகத்தில் புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமத்தில், ஏழைக் குடும்பத்தில் பிறந்த சாந்தி, தன் 25 வயதில், தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில் 800 மீ., ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். ஆனால் அதன் பின்பு, சர்வதேச தடகள விளையாட்டு ஆணையம் (ஐ.ஏ.ஏ.எப்.,)அவரது பாலினம் குறித்த சந்தேகத்தில், அவரிடம் பரிசோதனை நடத்தி அவர் பெண் என்பது நிரூபிக்கப்படாததால், அவர் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது. அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. இத்தடையை, இந்திய தடகள கூட்டமைப்பு (ஏ.எப்.ஐ.,) ஏற்றுக் கொண்டது. ஆனால், தென்னாப்ரிக்காவின் கேஸ்டர் செமன்யா விவகாரத்தில், இதே பிரச்னை வேறு விதமாக எதிர்கொள்ளப்பட்டது. சாந்தியை விட ஒன்பது வயது இளையவரான செமன்யா, 2009ல் நடந்த உலக சாம்பியன் போட்டியில், 800 மீ., ஓட்டப்பந்தயத்தில், தங்கப் பதக்கம் வென்றார். அவர் மீதும் பாலினப் பிரச்னை எழுப்பப்பட்டு, தடை விதிக்கப்பட்டது. ஆனால் தென்னாப்ரிக்க மக்களும், அதிபரும் அவருக்கு ஆதரவாக நின்றனர். அதிபர் ஜேக்கப் ஜுமா, செமன்யாவுக்கு ஆதரவு கோரி நடந்த பேரணியில் பங்கேற்றார். தொடர்ந்த போராட்டங்களால் ஐ.ஏ.ஏ.எப்., செமன்யா மீதான தடையை விலக்கியது. அவர் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளித்தது.
ஆனால், சாந்தியின் நிலைமை தலைகீழாக இருக்கிறது. தற்போது தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கியுள்ள பயிற்சியாளர் வேலையில், புதுக்கோட்டையில் அவர் பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார். அவருக்கு மாதச் சம்பளம் 5,000 ரூபாய்.
இதுகுறித்து தமிழக வீராங்கனை சாந்தி விரக்தியுடன் கூறியதாவது: நான் திரும்பவும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். செமன்யாவைப் பொருத்தவரையில் தென்னாப்ரிக்க மக்கள் அவர் பின்னால் நின்றனர். எனக்கு, தமிழக அரசு நிதியுதவி வழங்கியது. மத்திய அரசோ, விளையாட்டு ஆணையமோ எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. இந்த நிலையை அடைய நான் எவ்வளவோ தியாகம் செய்தேன். என் குடும்பத்தைத் தவிர, பதக்கம் பறிக்கப்பட்ட அந்த இருளான காலகட்டத்தில் வேறு யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. அதனால், வெறுத்துப் போய் தற்கொலைக்கு முயன்றேன். அதன் பின்தான் இந்த வேலை கிடைத்தது. இந்த குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும் தருணங்களில் என் வேதனையை சற்றே மறந்து விடுகிறேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தந்தால் என்னால் போட்டியில் வெல்ல முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவேன். இவ்வாறு சாந்தி தெரிவித்தார்.

ganesh - madurai,இந்தியா
2010-07-16 01:38:43 IST
ஒரு மனித இனமாக இருந்து (பாலினமாக அல்ல) இதை அணுக வேண்டும். நமது நாட்டிக்கு பெருமை சேர்த்த சந்ததிக்கு, பாலின மேன்மை சிகிச்சை செய்ய மருத்துவ உதவி செய்திருக்க வேண்டுமே தவிர தடை விதித்திருக்க கூடாது.நமது நாட்டில் இதற்காக குரல் கொடுக்க ஒரு மாதர் சங்கம் கூட இல்லையா, அல்லது அவை மாதர் சங்கங்களே!? இல்லையா என்று தெரியவில்லை....
மணிகண்டன் - tamilnad,இந்தியா
2010-07-16 01:30:02 IST
இதுதான் சகோதரி நம்முடைய நாடு முன்னேறாததற்கு காரணம். வாழ்க உமது சேவை. நாட்டுமக்கள் திருந்துவது கிடையாது....
BADSHA - thanjavur,இந்தியா
2010-07-16 01:10:31 IST
இந்த செய்தியை வெளியிட்ட தினமலருக்கு நன்றி...
பாட்ஷா - tHANJAVUR,இந்தியா
2010-07-16 01:09:05 IST
என்ன கொடும சார் இது கலைஞர் அய்யா விளையாட்டு துறைக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். தடையை நீக்கிட உதவுங்கள்...
ச.angappan - karur,இந்தியா

கருத்துகள் இல்லை: