வியாழன், 15 ஜூலை, 2010

ஆனந்தவிகடனே மீண்டும் ஒருமுறை அருந்ததிராயிடம் பேட்டி கண்டு நாம் எழுப்பியுள்ள

அருந்ததிராய்க்கு சில கேள்விகள்
-கே.ஆர்.
அருந்ததிராய் அண்மையில் சென்னை வந்திருந்தபோது அவரைச் சந்தித்து ஒரு பேட்டி எடுத்து பிரசுரித்திருக்கிறது ஆனந்த விகடன். அவரைஇந்திய எழுத்துலகின் முற்போக்கு முகம்என்று அறிமுகம் செய் கிறது விகடன். மத்திய இந்தியாவின் தண்ட காரண்யா காடுகளில் இருக்கும் கனிம வளங் கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படுவதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் வில், அம்பு ஏந்தி வீரத்துடன் போரிட் டுக் கொண்டிருக்க, அறிவுலகில் தன்னந் தனியாக நின்று போராடுகிறார் அருந்ததிராய் என்கிறார் பேட்டி கண்ட நிருபர்.

அண்மையில் தண்டகாரண்யா காடு களுக்குச் சென்று மாவோயிஸ்ட்டுகளைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் ராய்.

நான் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை, அதை யார் செய்தபோதிலும் ஒரு போதும் ஆதரிக்கப்போவதில்லை. ஆனால் ரயில் கவிழ்ந்தவுடன் எந்தவித ஆதாரங்க ளும் கிடைப்பதற்கு முன்பே இதை மாவோ யிஸ்ட்டுகள்தான் செய்தார்கள் எனத் தீர்ப்பு எழுதுபவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்படும் போதும், காடுகளை விட்டுத் துரத்தப்படும் போதும் எங்கு போயிருந்தனர்?” என்று பதி லளிக்கிறார் ராய்.

அருந்ததிராய் சாதாரண மக்கள் கொல்லப் படுவதைத் தான் ஆதரிப்பதில்லை என்று கூறினாலும், அதைச் செய்துகொண்டிருக்கிற மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகவே பேசுகிறார் என்பது வெளிப்படை. பழங்குடி மக்க ளுக்கு ஆதரவாக மத்திய அரசுடன் போராடிக் கொண்டிருக்கிற- மேற்குவங்க அரசுக்கு எதி ராக திரிணாமுல் காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் தொடுப்பதற்கான காரணத்தை ராய் விளக்கு வாரா? மேற்குவங்க அரசு பழங்குடி மக்களை அவர்களது காடுகளை விட்டு விரட்டியதாக இடதுசாரி எதிர்ப்புப் பத்திரிகைகள் கூட இதுவரை எதையும் எழுதியதில்லையே...? இந்தியாவில் விநியோகிக்கப்பட்ட உபரி நிலத்தில் ஐந்தில் ஒரு பகுதியை ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்துள்ள ஒரே மாநில அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட் டுகள் அராஜகக் கொடியை உயர்த்தியிருப்பது ஏன் என்பதை அவர் விளக்குவாரா?

ஆனந்தவிகடனே மீண்டும் ஒருமுறை அருந்ததிராயிடம் பேட்டி கண்டு நாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கான அவரது விடை களைப் பிரசுரித்தால் நல்லது.
முற்போக்கு முகம்என்றால் சகட்டு மேனிக்கு மாவோ யிஸ்ட்டுகள் தவிர உள்ள எல்லோரையும் வசைபாடுவதுதானா என்பதை ஆனந்த விகடன் நமக்குச் சொன்னால் நல்லது.
மாவோயிஸ்ட்டுகள் போலவே மாற்றுக் கருத்தாளர்களையும் முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகளையும் அப்பாவி சிங்கள், முஸ்லீம், தமிழ் மக்களை கொன்று குவித்த புலிகளை ஆதரித்து செயற்பட்ட கருத்து வெளியிட்ட அருந்ததி ராய் இதற்கும் விளக்கம் அளிப்பாரா? புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு பல ஆயிரம் மக்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிவப்பு சட்டை அணிந்து தமிழ் நாட்டு தோழர் ராஜாவிடம் குழைந்ததை ஏற்றுக் கொண்ட நிகழ்விற்கு சம்மந்தப்பட்டவர்கள் விளக்கம் கொடுப்பார்களா?சாகரன்

நன்றி : புதிய
ஆசிரியன்

கருத்துகள் இல்லை: