செவ்வாய், 13 ஜூலை, 2010

ஈவ்டீசிங் காரணமாக +1 மாணவி தற்கொலை

ஓசூரை அடுத்த ராமச்சந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் பாகளூர் அரசுப் பள்ளியில் +1 வகுப்பு படித்து வந்தார். தந்தையை இழந்த சசிகலாவை தயார் லட்சுமி அம்மாள் அம்மாள் வளர்த்து வந்தார்.
தினசரி மாணவி சசிகலா, வீட்டில் இருந்து ராமச்சந்திரம் கிராமத்தின் எல்லை வரை நடந்து சென்று, அங்கிருந்து அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். அப்போது ராமச்சந்திர கிராமத்தில் வாலிபர்கள் சிலர் சசிகலாவை கேலி செய்துள்ளனர். மாணவி கண்டித்தும் வாலிபர்கள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

வாலிபர்கள் கிண்டல் செய்வதை, தனது தாயார் மற்றும் சகோதரியிடம் தினம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அதற்கு விரைவில் சைக்கிள் வாங்கி தருவதாக சகிகலாவை சமாதானப்படுத்தியுள்ளனர்.

வழக்கம்போல் இன்றும் சசிகலா, பள்ளிக்குச் செல்லும்போது, வாலிபர்கள் கிண்டல் செய்துள்ளனர். பள்ளிக்குச் சென்ற சசிகலா இன்று பள்ளி வகுப்பறையிலேயே, தான் எடுத்துச் சென்றிருந்த விஷத்தை அருந்தியுள்ளார்.

இதையறிந்த சக மாணவிகள் கொடுத்த தகவலின்படி, பள்ளி ஆசிரியர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இச்சம்பவம் குறித்து பாகளூர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் ராமச்சந்திரம் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: