வெள்ளி, 16 ஜூலை, 2010

6.628 பேருக்கு ஆசிரியர் நியமனம் 554 பட்டதாரிகளை ஆங்கில

பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பதற்காக அடுத்த பாடசாலை தவணைக்கு முன்னர் 6.628 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.இதன்படி 554 பட்டதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நியமிப்பதற்கு நாளை மறுதினம் (18) நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது பட்டதாரி ஆசிரியர் பதவிக்காக 8.200 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள 60 நிலையங்களில் நேர்முகப் பரீட்சை நடத்தப்படும்.இதுதவிர 3.174 அழகியற் கலை ஆசிரியர்களை நியமிக்க நிதி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கேற்ப நியமிக்கப்படுவர்.
பட்டதாரிகளை அழகியற்கலை ஆசிரியர்களாக நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் கோரப்படும். அது தொடர்பான விளம்பரங்கள் இன்றைய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 6க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.சகல கல்வியியல் கல்லூரிகளில் இருந்தும் வெளியான 2.900 ஆசிரியர்களுக்கும் அடுத்த தவணைக்கு முன்னர் நியமனம் வழங்க உள்ளோம். இந்த நியமனங்களின் மூலம் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவு நீங்குமென கருதுகிறோம்.இதேவேளை ஆசிரியர்களின் இடமாற்றத்தையும் முறையாக மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை: