செவ்வாய், 13 ஜூலை, 2010

ராமதாஸ் ஆவேசப்பேச்சு ,நம்மை பிரித்து விட்டனர


நம்மை கூறுபோட்டு பிரித்து விட்டனர் :
தொண்டர்களிடையே ராமதாஸ் ஆவேசப்பேச்சு
புதுவை சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வன்னியர் சமூக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
பாமக நிறுவனர்  ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.

பின்னர் ராமதாஸ் பேசும் போது,புதுவையில் 100-க்கு 70 பேர் வன்னியர்கள் உள்ளனர். ஆனால் மற்ற அரசியல் கட்சிகள் நம்மை கூறுபோட்டு பிரித்து விட்டனர்.
புதுவையில் இளைஞர்களை பாமக கட்சியில் அதிகம் சேர்க்க வேண்டும். அவர்களிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும். முதியவர்கள் பல்வேறு கட்சியிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இனி மீட்க முடியாது.
புதுவையில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்தால், ஆட்சியை நாம் தான் நடத்துவோம். புதுவையில் ஒரே ஒரு தடவை வன்னியர் ஒருவர் முதல்வராக இருந்தார். இதற்கு நாம் தான் காரணம்.

அந்த முதல்வர் வன்னியர் சங்க கூட்டத்தில் வந்து, நான் வன்னியர் என்று கூறுவாரா?
கூறமாட்டார். அவர் மட்டுமல்ல, மற்ற கட்சிகளிலும் பொறுப்பு வகிப்பவர்கள் கூட வெளிப்படையாக கூறமாட்டார்கள். காரணம், அவர்கள் கட்சியிலுள்ள ஆதிக்க ஜாதி தலைவர்களை மீறி பேச முடியாது’’ என்று தெரிவித்தார்.
பழைய பா மா கா தொண்டன்.
அய்யா டாக்டரே கடைசியில் ஜாதி வெறியை  கையில்  எடுத்துவிட்டீர்? அது சரி எங்கே அய்யா உங்களை பிரித்து விட்டார்கள்? உங்கள் மொத்த குடும்பமே ஒற்றுமையாக வாரிச்சுருட்டுகிரீர்களே? அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டு கிடைக்கவில்லை என்பதும் உமக்கு வெறி பிடித்துவிட்டதா?ஏன் அய்யா பசுமைத்தாயகம் தான் உங்கள் கையில் இருக்கிறதே? சௌம்யா அம்மையார் தானே அதைக் கண்ட்ரோல் பண்ணுகிறார்? உங்கள் இனமான சுலோகம் எல்லாம் எடுபடவில்லை என்றதும் பழைய ஜாதி வெறிக்கோஷங்களை மீண்டும் தூக்கி விட்டீர்கள். ஆனாலும் என்ன அது உங்களுக்கு கைகொடுக்காது.புள்ளிவிபரங்களை பாரும். நம்ம ஆட்கள் நன்றாக படித்துவிட்டார்கள்.

கருத்துகள் இல்லை: