புதன், 14 ஜூலை, 2010

முஸ்லீம் பெண்ணும் இந்துப்பையனும் காதலித்து வந்துள்ளனர்

இந்து-முஸ்லீம் கலவரம் - 400 போலீசார் குவிப்பு:
 600 பேர் மீது வழக்குப்பதிவு: ராமநாதபுரம் பதட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நகரத்தில் இந்து-முஸ்லீம் அதிகம் வாழ்கின்றனர். 

இங்கு  முஸ்லீம் பெண்ணும் இந்துப்பையனும் காதலித்து வந்துள்ளனர்.  இரு மதத்திலும் சம்மதம் கிடைக்காது என்று தெரிந்ததும் இவர்கள் இரண்டு பேரும் நேற்று முன் தினம் இரவு ஊரைவிட்டு ஓடிவிட்டனர்.
இந்த விசயம் நேற்று தெரிய வந்தது.  இதையடுத்து இந்து-முஸ்லீம் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் மூண்டது.    இந்த கலவரத்தில் இரு தரப்பினர் மீதும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
400க்கும் மேற்பட்ட போலீசார் விரந்து வந்து கலவரத்தை தடுத்து நிறுத்தினர்.  இந்த கலவரம் தொடர்பாக இரு தரப்பு ஆண்கள் 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கைது பயத்தில் 600 பேரும் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர்.

மேலும் கலவரம் மூளாமல் இருப்பதற்காக 400 போலீசார் அங்கேயே தங்கியிருக்கின்றனர்.  இதனால் இன்று இரவு வரை பதட்டம் நீடிக்கிறது.

கருத்துகள் இல்லை: