புதன், 14 ஜூலை, 2010

யாழ்தேவி ஓமந்தை வரை நீடிக்கப்படும். ஓமந்தை ரயில் நிலையத்தை ு சிங்கர் தனியார்

யாழ்தேவி ரயில் சேவை ஓகஸ்டில் ஓமந்தை வரை நீடிக்கப்படும்: 4 கி. மீ. நிர்மாணப் பணியே எஞ்சியுள்ளது
யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாத முடிவுக்குள் ஓமந்தை வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதியமைச்சர் ரோஹண திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்:- தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையில் ரயில் பாதையை மீண்டும் நிர்மாணிப்பதற்கான பணிகள் துரிதப்படுத்த ப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சியுள்ள நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஓகஸ்ட் மாதத்திற்குள் ரயில் பாதை நிர்மாணிப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு யாழ்தேவி ரயில்சேவை ஓமந்தை வரை நீடிக்கப்படும். ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிப் பதற்கு சிங்கர் தனியார் நிறுவனம் நிதியுதவியளிக்க முன் வந்துள்ளது. வலது குறைந்தோருக்கு தேவையான வசதிகளைக் கொண்டதாக இந்த ரயில் நிலையம் அமைக்கப்படவிருக்கிறது. இவ்வாறான வசதியை இலங்கையில் கொண்டிருக்கும் ஒரே ரயில் நிலையமாக ஓமந்தை ரயில் நிலையம் எதிர்காலத்தில் திகழும் என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை: