புதன், 14 ஜூலை, 2010

தெலுங்குக்குப் போகும் 'அங்காடித் தெரு '

தமிழில் பெரும் வெற்றி பெற்ற அங்காடித் தெரு தெலுங்கில் டப் செய்யப்படுகிறது. அடுத்த மாதம் தெலுங்கு டப்பிங்கை வெளியிடுகின்றனராம்.

மகேஷ், அஞ்சலியின் எதார்த்தமான நடிப்பில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற படம் அங்காடித்தெரு. சென்னை ரங்கநாதன் தெரு சூப்பர் ஸ்டோர் தொழிலாளர்களின் சோக வாழ்க்கையை அப்படியே நம் கண் முன் நிறுத்திய படம் இது.

வெயில் படத்தைத் தொடர்ந்து இப்படத்தை உருவாக்கி அனைவரையும் பிரமிக்க வைத்தார் இயக்குநர் வசந்த பாலன்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடவுள்ளனர். சென்னை கோதண்டபானி ஸ்டூடியோவில் டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றனாம். ஆகஸ்ட் மாதம் தெலுங்கு டப்பிங் படம் வெளியாகவுள்ளது.

கருத்துகள் இல்லை: