வியாழன், 15 ஜூலை, 2010

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை

எப்பாவல சதாரெஸ்கம பகுதி வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டியும் குத்தியும் குரூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்தார். இவர்களின் சடலங்கள் படுக்கை விரிப்பினால் சுற்றப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

தாய் தந்தை இரு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வீட்டுப்பக்கமாக இருந்து துர்வாடை வீசுவதையடுத்து அயலவர்கள் நேற்று எப்பாவல பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்டிருந்த நால்வரின் சடலங்களை கண்டெடுத்தனர்.

மேற்படி குடும்பஸ்தர் கடையொன்றில் பணிபுரிந்ததாகவும் இவர் திங்கட்கிழமை முதல் கடமைக்கு வரவில்லை எனவும் குடும்பஸ்தர் பணிபுரிந்த கடை உரிமையாளர் பொலிஸில் கூறியுள்ளார்.

இவர்கள் நால்வரும் 3 தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். பிரதம நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவம் குறித்து ஆராய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை: