சனி, 17 ஜூலை, 2010

வல்லை நெசவுசாலையை மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கை!

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினூடாக மீண்டும் வல்லை நெசவுசாலை இயங்க வைக்க எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது என முன்னாள் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் தில்லை நடராஜா தெரிவித்துள்ளார்.

வல்லை நெசவுசாலை புனரமைப்பு பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வில் இன்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த தொழிற்சாலைகளினூடாக பல நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்றிருந்தனர். ஆனால் இன்று இந்த தொழிற்சாலை மிக நீண்ட காலமாக இயங்காத நிலையிலுள்ளமை மிகுந்த வேதனையளிக்கின்றது.

இந்த நிலையில் இந்த நெசவுசாலையை மீண்டும் இயங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை: