செவ்வாய், 13 ஜூலை, 2010

யாழ். அதிபராக திருமதி இமெல்டா சுகுமார் பதவியேற்றுள்ளார்

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி இமெல்டா சுகுமார் பதவியேற்றுள்ளார்.  முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க  அதிபராகக் கடமையாற்றிய திருமதி  இமெல்டா சுகுமார், கடந்த முதலாம் திகதி யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக பதவியேற்கவிருந்தார். எனினும், இறுதி நேரத்தில் அவரின் பதவியேற்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று பிற்பகல் அவர் யாழ். அரச அதிபராக பதவியேற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: