புதன், 14 ஜூலை, 2010

கடல் நீர் மட்டம் இந்தியா, இலஙகை, பங்களாதேஸ் மற்றும் இந்தோனேஷியா

புவி வெப்பமடைவதால், இந்துமகா சமுதிரத்தில், கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.  இதனால், இந்தியா, இலஙகை,  பங்களாதேஸ் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் தாழ்வான கரையோரப்பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக, கொலராடோ பல்கலைக் கழகத்தின் வெய்குயிங் ஹன் என்பவர் தலைமையிலான ஆய்வாளர்கள்,  எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
உலகம் எங்கும், தற்போது ஏற்பட்டுவரும், கடல் நீர்மட்டம் உயர்வு காரணமாக உலகின் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பருவகால நிலையிலும் ஏற்பட உள்ள மாற்றங்களால் சுனாமி உருவாகி, வீடுகளுக்கும் உடமைகளுக்கும் ஆபத்து நேரலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

கடல் மட்டம் பொதுவாக வருடந்தோறும் 3 மில்லி மீட்டர்(0.1181 அங்குலம்) உயர்கிறது. ஆனால், தற்போது ஏற்பட்டு வரும் வெப்ப உயர்வினால் இந்த அளவு மேலும் கூடுகிறது.

வாகனப் புகை, மற்றும் ஏ.சி, பிரிட்ஜ் போன்ற குளிசாதனப் பொருட்களிலிருந்து வெளிவரும் குளோரோ ஃபுளோரோ கார்பன் வாயுவினால், பசுமை இல்லத் தாக்கம் ஏற்பட்டுகிறது. இதன் காரணமாகவே பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் குற்றம் சாற்றி உள்ளனர்.
பூமி மீது அதிகரித்து வரும் கரியமில வாயுக்களால், ஏற்படும் அதிக அளவு வெப்பத்தின் ஒரு பகுதியை சமுத்திரங்கள் உள்ளீர்ப்பதாலும், புவி வெப்ப உயர்வினால் கிரீன்லாந்து மற்றும் மேற்கு அண்டார்ட்டிகாவில் உள்ள  பனிமலைகள் உருகி கரைவதாலும் கடல் நீர் மட்டம் உயர்வதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய சமுத்திரமான இந்துமகா சமுத்திரம்,  பூமியின் மேற்பரப்பில் 20 % பகுதியை சூழ்ந்துள்ளது.எனவே இதன் நீர்மட்ட உயர்வின் ஆபத்துக்கள் படு பயங்கரமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே, இந்த ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும் திட்டங்கள், எதிர்காலத்தில் வகுக்கப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறித்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: