செவ்வாய், 13 ஜூலை, 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என பெயர் மாற்றம்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்தின் பெயரை தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என பெயர் மாற்றம் செய்யவுள்ள்தாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்க் கட்சிகளை மட்டுமல்லாது மலையகக் கட்சிகளையும், முஸ்லிம் கட்சிகளையும் இந்த அரங்குக்குள் ஒன்றிணைக்கின்றமை தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது என்றும் அவர், எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்தில் இது குறித்துக் கலந்துரையாடப்படுமெனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: