புதன், 14 ஜூலை, 2010

கம்யூ., கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன், HONDA கிசு... கிசுப்பு

பரதனுக்கு ஹோண்டா சிட்டி கார் கிடைத்தது எப்படி?

தொழிலாளர்களிடம் ஒப்பந்தம் போட்டு வேலை செய்யும் போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்தும், கம்யூ., கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன், சில நாட்களாக ஹோண்டா சிட்டி காரில் வலம் வருகிறார். இந்தக் கார் இவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து, கட்சியினர் சந்தேகம் கிளப்பியுள்ளனர். டில்லியில், கட்சித் தலைவர் ராஜா வீட்டுக்கு, பொதுச் செயலர் பரதன் சமீபத்தில் சென்றார். அவர் வீட்டு வாசலில் காரை நிறுத்தி விட்டு, ராஜாவுடன் பேசி முடித்து வெளியே வருவதற்குள், அவர் காரைக் காணவில்லை. யாரோ, காரை, "லவட்டி'க் கொண்டு சென்று விட்டது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.அந்த டிரைவரை போலீஸ் வளைத்துப் பிடித்து காரை மீட்டனர்.கட்சி உறுப்பினர்களிடையே தற்போது உலா வரும் கிசு... கிசு:அரியானா, ஹோண்டா தொழிற்சாலையில், சமீபத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அதற்கு ஆதரவாக, பரதன் குரல் கொடுத்து வந்தார். பின்னர், என்ன காரணத்தினாலோ, போராட்டம் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது. இப்போது, பரதன் பயன்படுத்த ஒரு ஹோண்டா சிட்டி கார்!கட்சியினர் கிசு... கிசுப்பு நியாயமானது தானே!

கருத்துகள் இல்லை: