வியாழன், 15 ஜூலை, 2010

உருத்திரகுமாரா மனிதன் கொஞ்சம் மிருகம் எக்கசக்கம் கலந்து செய்த கலவை நீ!

போர் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்
(மோகன்)
ஊரில சிறுசுகளாக இருக்கும் போது எங்களுக்கு நல்லூர் கோவில் திருவிழா என்றால் செம ஜாலி அந்த இருபத்தைந்து நாட்களும் சந்தோசத்தின் உச்சிக்கே சென்றுவிடுவோம். அதன் பாதிப்பு திருவிழா முடிந்தவுடன் நம்மளை விட்டு சடுதியா கலைவதில்லை. அந்த சந்தோசத்தின் வெளிப்பாடு மேலும் குறையாமல் இருக்க குரும்பையில தேர் கட்டி, காட்போர்ட் மட்டையில சப்பரம் கட்டி எங்க வீட்டு வளவைச்சுற்றி இழுத்து வருவோம், கொஞ்சம் ரெக்னோஜியில இம்புறூவாகி போக சப்பரத்துக்கு லைட்டு போட்டு றோட்டிலேயே உலா வர வைப்போம் எங்கள் முருகனை. இப்ப எதற்க்கு இதல்லாம் என்று நீங்கள் முணுமுணுக்கிறது புரியுது என்னவோ தெரியல நம்ம புலன் பெயர்ந்ததுகள் நாடு கடந்த தமிழீழ அரசென்றும் அதற்காக மாறி மாறி நடத்திற எலக்ஸன் கூத்துக்களை பார்க்கும் போது நாம அண்ணைக்கு ஒரு கோயில் திருவிழாவை சொந்தமாக நடத்திய சந்தோசத்தை போல இதுகளும் நமக்கொரு நாடு அதுக்கொரு எலக்ஸன் என்று நடத்தி சந்தோசமடையிறாப்போல தெரியுது. என்ன ஒண்ணு நாம சிறுபிள்ளைத்தனமா இருந்து சந்தோஷப்பட்டதை இதுகள் சின்னப்பிள்ளைத்தனமா நடந்து சந்தோசப்படுதுகள். பொதுவாக மூளை வளர்ச்சி குறைவானவர்களின் சேட்டைகள் குழந்தைத்தனமாக இருக்கும் என்பதால இதுகளை கண்டு கொள்ளாமல் இருக்கலாம்தான்.. ஆனாலும் நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கிறது பெட்டர் தானே.
ஓட்டகத்திற்கு இடம் குடுத்த கதையை போல நம்ம சிலோன் தமிழன்களுக்கு ஒட்ட இடம் கொடுத்த நிலையா போச்சு கனடாக்காரன்களுக்கு. இவன் என்னடாவென்றால் எலக்ஸன் நடத்துற சாக்கில கனடாவை தொகுதி, மாவட்டம், வட்டாரம் என அக்குவேற ஆணிவேறா பிரிச்சு வைச்சிருக்கிறான், கூடிய சீக்கிரம் கனடாவை பிளாட் போட்டு வித்தாலும் ஆச்சரியப்பட முடியாது. இப்ப லேட்டஸ்டா உலகத்தமிழரும் ஒரு எலக்ஸன் நடத்தினவையள். அதில இந்த இந்த தொகுதிக்கு இத்தனை இத்தனை மெம்பர் செலக்ட் பண்ணப்படுவினம் என்று வடிவா போட்டினம் அப்படியே கீழ போய் பார்த்தால் செலக்ட் பண்ணப்படவேண்டிய மெம்பரும் போட்டியிடுற நம்பரும் சேம், இது என்ன பப்பி சேம் அட அதுகூட பரவாயில்ல சில தொகுதிக்கு தேவையான வோன்டட் மெம்பருக்கே போட்டி போடுவதெற்கே நொட் இனப் மெம்பர். அப்ப எதற்கு சனங்களை வேலமெனக்கிட்டு போய் புள்ளடி போடச்சொன்னாங்களோ எண்டு இப்ப புரியுதா?
எல்லாம் சிறிலங்காவில நடந்த தேர்தல் திருவிழாவின்ர பாதிப்புதான், நம்ம புலன் பெயர்ந்ததுகளுக்கு ரொம்பவும் குசிப்பேச்சிடுச்சு. ரேடியோக்காரன்களும் நீங்கள் போடுற புள்ளடிதான் சிங்களவனுக்கு கொடுக்கிற நெத்தியடி எண்டு நம்ம சனங்கள உசுப்பேத்த இதுகளும் ஓட்டுப்போட்டிட்டு வந்து 'இனி செத்தாண்டா மகிந்தா' என்று புல்லரிச்சு போய் எனி இந்தியாக்காரன்களாலேயும் ஒரு மயிரும் புடுங்கேலாது என்று கடைகடையாய் நின்று வியாக்கியானம் வேறு. அட எல்லாத்துக்கும் மேல காமடி என்னன்டால் சில தொகுதிகளுக்கு மறு வாக்கு பதிவு நடைபெறுமாம், நேர்மையான தேர்தலாம் அடசாமி ரொம்பத்தான் படுத்திறான்களடா. 
கே.பிக்கு சிங்களம் கொடுக்கிற வசதிகளை பார்த்து நம்ம உருத்திரகுமாரனுக்கும் ஆசை வந்திட்டு போல தன்னையும் கண்ணைக்கட்டிட்டு கடத்திட்டு போவாங்கள் என்ற நப்பாசையில அறிக்கைகளும் விடத்தொடங்கிட்டார்.  பின்னர் என்னவாம் நாடு கடந்து அரசு எங்கேயாவது கிடந்திட்டு போகட்டும் என்று விட்டிட்டு அதற்காக சுத்தினனோடு மனுசன் எஸ்கேப் ஆறதை விட்டிட்டு அறிக்கை விடுறாராமே அறிக்கை அதுவும் போர்க்குற்றத்தை பற்றி. ஐக்கிய நாடு சபைக்கு தங்கள் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமாம். சிறீலங்கா அரசுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார். பொதுவாக நம்ம புலிச்சனங்கள் கொஞ்சம் இழிச்சவாயர்கள்தான் ஆனாலும் இது கொஞ்சம் டூ.. டூமச். கசாப்பு கடைக்காரன் தொழில் அவனைப்பொறுத்தவரை தர்மம் என்பதை நாம ஏற்றுக்கொண்டதிற்காக அவன் காருண்யம் பற்றி பேசுறது எல்லாம் நல்லாவா இருக்கு? ஐயா புலிக்காரர்களே! முதல்ல குற்றம் என்று எதை நினைக்கிறீங்க என்று கொஞ்சம் சொல்லமுடியுமா? பின்னர் அதைப்பற்றி பேசுற தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பத யோசிப்போம்.
சிங்கள அரசு ஆகாயத்திலிருந்து குண்டு போட்டது குற்றம்தான் அப்ப அதே குண்டை மடியில் கட்டிக்கொண்டு போட்டால் மட்டும் சுற்றமா? அட நீங்களும் முடிஞ்ச அளவுக்கு வான வேடிக்கை காட்டியவர்கள்தானே. சரண் அடைஞ்சவர்களை சாக்காட்டினது குற்றம்தான் அப்ப உங்ககிட்ட சரணடைஞ்சாங்களே ஆயிரக்கணக்கா மாற்று இயக்கத் தோழர்கள், அப்பாவி பொதுமக்கள், நூற்றுக்கணக்கான படையினர் இவர்கள் எல்லாம் எங்கேயென்று சொல்லமுடியுமா? உயிரைக்காக்க தப்பியோடி வந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொன்றது குற்றம்தான் அப்ப அதே அப்பாவி மக்கள் உயிரைக்காக்க ஓடிய போது பின்னால் இருந்து சுட்டுக்கொன்றால் மட்டும் சுற்றமா? இப்படி சிங்கள அரசு செய்ததை எதை நீங்கள் செய்யவில்லை? அல்லது எதை அவர்களை விட குறைவாக செய்தீர்கள்? சொல்லமுடியுமா? சிங்கள அரசின் தவறுகள் போர்க்குற்றம் ஏனெனின் அது ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கபட்ட அரசு ஒத்துக்கொள்கிறோம், இதே தவறுகளை இதைவிட அதிகமாக எமது மக்களுக்கு செய்தது போர்க்குற்றம் அல்ல மிருகவெறித்தனம். விலங்குகள் வெறித்தனமாக ஊளையிடலாம் அறிக்கைகள் எல்லாம் விட்டு காமடி கீமடி பண்ணக்கூடாது. சரியா நந்தகுமாரா மன்னிக்கவும் உருத்திரகுமாரா மனிதன் கொஞ்சம் மிருகம் எக்கசக்கம் கலந்து செய்த கலவை நீ! மனித இனத்தை எண்ணி கவலை கொள்வது உன் இனத்திற்க்கு தேவையில்லாத வேலை.
(மோகன்)

கருத்துகள் இல்லை: