புதன், 14 ஜூலை, 2010

நக்சலைட்டுகள் 6 மாதத்தில் 97 தாக்குதல் : சட்டீஸ்கர் தண்டேவாடா தாக்குதல்

புதுடில்லி : நக்சலைட்டுகளை ஒடுக்க ஒருங்கிணைந்த அதிரடிப் படை அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நக்சலைட்டுகளை ஒடுக்குவது குறித்து டில்லியில் இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் சிலரும் கலந்து‌ கொண்டுள்ளனர். மேற்குவங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இருக்கும் ஜார்கண்ட் கவர்னர் ஆகியோர் இந்தலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் துவக்க உரை ஆற்றிய சிதம்பரம் கூறியதாவது : நக்சலைட்டுகள் தாக்கம் உள்ள மாநிலங்களில் கூடுதல் ஆயுத உதவி அளிக்கப்படும். ஒருங்கிணைந்த அதிரடிப் படையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ தளபதி இதற்கு தலைவராக இருப்பார் என்றார். சம்பந்தப்பட்ட மாநில்ஙகளும் ஐ.ஜி., அந்தஸ்தில் இருக்கும் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும் ரூ. 400 கோடி செலவில் 7 மாநிலங்களில் கூடுதலாக காவல் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் இதற்கான 20 சதவீத செலவை மாநில அரசுகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

6 மாதத்தில் 97 தாக்குதல் : சட்டீஸ்கர் தண்டேவாடா தாக்குதல் உள்ளிட்ட 97 தாக்குதல்களை நக்சலைட்டுகள் கடந்த 6 மாதங்களில் நிகழ்த்தியுள்ளதாக சிதம்பரம் வருத்தம் தெரிவித்தார். இன்றை கூட்டத்தில் மேலும் பல முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீவா - singapore,இந்தியா
2010-07-14 19:17:26 IST
முதல்ல தேர்தலில் நியாயமா ஜெயிக்கபாரு சிதம்பரம்........ விளையாடாத .........
ஜமால் - riyadh,இந்தியா
2010-07-14 17:56:29 IST
எந்த திட்டங்கள் தீட்டினாலும் மாநில அரசுகல் முழு மனதுடன் ஒத்துலைபு அவசியம் .... ...
2010-07-14 17:54:07 IST
இந்த வீணாப்போன வெங்காயம் ப.சிதம்பரம் வாயை திறந்தாலே எத்தனை பேர் சாக போகிறார்களோ?இவர் வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும்...
கனியரசன் - சிங்கப்பூர்,ஸ்லேவாக்கியா
2010-07-14 17:17:55 IST
சிதம்பரம் பேச்சில் மட்டுமே அக்கறை உள்ளார். நக்சலைட்டுகள் பல தாக்குதல் நடத்தி விட்டார்கள். இவர் இதுவரைக்கும் ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை. பல உயிர்கள் கொன்றுவிட்டார்கள்....
கோபி - Ardiya,குவைத்
2010-07-14 17:15:32 IST
இவர் ஒரு படை அமைக்க முடிவு எடுப்பதற்குள் அப்பாவி மக்கள் பலர் உயிர் தியாகம் செய்ய வேண்டிருக்கும். சிதம்பரம் தனது இயலாமையை ஒத்துக்கொண்டு பதவி விலகினால் நல்லது. ...
ரக்து - chennai,இந்தியா
2010-07-14 15:23:27 IST
நக்சல்களை ஒடுக்க தவறிய மத்தியஅரசு உடனே ராஜினமசெய்யவேண்டும்...

கருத்துகள் இல்லை: