புதன், 14 ஜூலை, 2010

22 வயதில் சாதனை : ஐ.ஐ.டி உதவிப் பேராசிரியர் பணி

professor Tathagat Tulsi
பாட்னாவைச் சேர்ந்த, 22வயதே ஆன ‘தத்தாகத் அவுதர் துள்சி’ என்பவர், இந்தியாவிலேயே மிக இளம் வயதில், மும்பையில் உள்ள உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டியில்  உதவிப் பேராசிரியராக பணி வாய்ப்பை பெற்றுள்ளார். 
தனது 9-வயதிலேயே, பள்ளிப் படிப்பை முடித்துள்ள துள்சி, 1வயதில்  இளநிலை பட்டமும்(Bsc), 12வயதில் முதுநிலை பட்டமும்(Msc) பெற்றுள்ளார்.

மேலும், தனது 21வயதில் ‘குவாண்டம் கம்ப்யூட்டிங்’ல் முனைவர் பட்டமும்(Pht),  பெங்களூரில் உள்ள உயர் கல்வி நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் டெக்னாலஜியிம் முனைஅவ்ரப் பட்டமும் பெற்றுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டில், உலகின் 7 இளம் வயது அறிஞர்களில் ஒருவராக, புகழ் பெற்ற ‘டைம்’ பத்திரிக்கையால், தத்தாகத் அவுதர் துள்சி தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டமும் பெற்றார்.
இதன் அடிப்படையில், கனடாவின் வாட்டர்லு பல்கலைக்கழகம் , போபாலில் உள்ள பல்கலைக் கழகம் போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து அழைப்புகள் வந்துள்ள நிலையில், தற்போது, மும்பையின் ஐ.ஐ.டி கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்ற உள்ளார் துள்சி.

கருத்துகள் இல்லை: