புதன், 14 ஜூலை, 2010

அருப்புக்கோட்டை: பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை?

அருப்புக்கோட்டை அருகே விருதுநகர் மாவட்டம் காளையார்கரிசல்குளம் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ஜான் மோசஸ்(25) மீது கற்பழிப்பு, கொலை,கொள்ளை, இரு சக்கர வாகன திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
சென்னையிலும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இவர் ரெட்டியார்பட்டி அருகே உள்ள சாலையில் மர்மமான முறையில் ரத்த காயத்துடன் சாலையில் இறந்து கிடந்தார்.
இது பலிவாங்கும் செயலா? போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றார்களா? என்ற விபரம் தெரியவில்லை.
காவல்துறை இது பற்றி விளக்கம் இன்னமும் விளக்கம் அளிக்காததே இந்த குழப்பத்திற்கு காரணம்.

கருத்துகள் இல்லை: