புதன், 14 ஜூலை, 2010

வவுனியா வைத்தியசாலையில் கண்சிகிச்சை நிலையத்திற்கு முதற்பெண்மணி

வடபகுதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் பாரிய கண்சிகிச்சை திட்டத்தினை இன்றையதினம் இலங்கையின் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஸ ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவின் திட்டத்தின்படியும் இந்திய சல்மான்கான் நிதியத்தின் அனுசரணையுடனும் மேற்கொள்ளப்படவுள்ள பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு பத்தாயிரம் கண்வில்லைகள் பொருத்தும் செயற்றிட்டத்தினையே இன்றையதினம் ஷிராந்தி ராஜபக்ஸ ஆரம்பித்து வைத்து பார்வையிட்டார். வவுனியா வைத்தியசாலை சத்திரசிகிச்சைக் கூடத்தில் இடம்பெற்ற முதலாவது கண்வில்லை பொருத்தும் சிகிச்சையினை பிரபல இந்திய கண்சிகிச்சை நிபணர் ஹாலிஜ் லாஹிஜி மேற்கொண்டபோது முதற்பெண்மணியுடன் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதியுமான சுதர்சினி பெர்ணான்டோ புள்ளேயும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: