வியாழன், 15 ஜூலை, 2010

காலிக் கடலில் இனந்தெரியாத இரு யுவதிகள்

காலி கடற்கரையிலிருந்து சுமார் 150 கிலோ மீற்றர் தொலைவில் கடலில் கைவிடப்பட்ட நிலையில் இரு யுவதிகள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடலில் தத்தளித்த இவர்கள் காப்பாற்றப்பட்டு காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும் இவ்யுவதிகள் கதைக்கும் மொழி என்னவென்பது குறித்தோ இவர்களது இனம் நாடு குறித்தோ இருநாட்கள் நடந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் மேற்படி யுவதிகளைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் இவ்யுவதிகள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: