வெள்ளி, 16 ஜூலை, 2010

தமிழகப் பெண்களிடம் பலாத்காரம்-2 மலையாளிகள் கைது

செங்கோட்டை அருகேயுள்ள கும்பாவுருட்டி அருவியில் குளிக்க சென்ற தமிழக சுற்றுலா பயணிகளை பலாத்காரம் செய்த 2 பேரை கேரள போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கோட்டை அருகேயுள்ள கேரள பகுதி அச்சன்கோவில். இங்குள்ள கும்பாவுருட்டி அருவி, மணலாறு அருவி, இந்த பகுதி சுற்றுலா தல பகுதியாகும். இப்பகுதி முழுக்க முழுக்க கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அந்தந்த பகுதிகளை சேர்ந்த 10 பேர் கொண்ட வனக்குழுவினர் இங்கு பணியாற்றுவர். இப்பகுதிக்கு சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ளனர். அக்குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் இருவரின் ஆடையை அகற்றி நிர்வணமாக ஓட செய்து ரசித்தும், பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த காட்சி அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு பிரபலமான இணைய தளத்தில் சில தினங்களுக்கு முன் வெளியானது. தமிழக சுற்றுலா பயணிகளுக்கு நடந்த இக்கொடூர சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை உருவாக்கி கேரள சட்டமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் விசாரணைக்கு உத்தரவிட்டதோடு தனி்ப்படை அமைத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து இரு நாட்களாக வனத்துறை, காவல் துறையினர் இணைந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் அச்சன்கோவில் கும்பாவுருட்டி, மற்றும் மணலாறு பகுதிகளில் வனக்குழுவில் பணியாற்றிய 2 நபர்களை குழத்துபுழா இன்ஸ்பெக்டர் சந்தோஷ் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணையில் சம்பவங்கள் நடந்தது உண்மை, 3 ஆண்கள் சேர்ந்து இந்த பெண்களை பலாத்காரம் செய்ததும், நிர்வணமாக ஓட வி்ட்டதையும் அந்த இருவரும் ஒத்துக் கொண்டுள்ளனர். மேலும் ஒரு நபரின் செல்போனில் படம் பிடித்ததும், பிடித்த பகுதி மணலாறு அருவி பகுதி என்றும் கூறியுள்ளனர்.

வீடியோ எடுத்த நபரின் கேமரா செல் தொலைந்து விட்டதாகவும் அதில் இருநதுதான் யாரோ இணைய தளத்தில் வீடியோ காட்சிகளை பரப்பி விட்டதையும் இதுபோல் பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து அச்சன்கோவிலை சேர்ந்த அந்த இரு நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை: