வெள்ளி, 16 ஜூலை, 2010

திருமாவளவன் தந்தை உடலுக்கு கலைஞர்அஞ்சலி

திருமாவளவன் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் விபரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தந்தை ச.ராமசாமி என்கிற தொல்காப்பியன்(76) நேற்று இரவு ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார் அவரது உடல் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக வேளச்சேரி தமிழநாடு வீட்டு வசதி வாரியக்குடியீருப்பு,இரண்டாம் சாலையில் உள்ள தாய்மண் அறக்கட்டளை அலுவலகத்தில் இன்று வைக்கப்பட்டது.

திருமாவளவனின் தந்தை மரணத்திற்கு முக்கியப்பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’தொல். திருமாவளவன் தந்தையார் ததொல்காப்பியன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், நடுவண் அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், கோ.க. வாசன், புதுவை நாராயணசாமி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு,

சென்னை மேயர் மா. சுப்பிரமணியன், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன், தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா,திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சார்பாக அவரது மகன் அன்புராஜ், பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன், பா.ம.க. முன்னாள் நடுவண் அமைச்சர்கள் அன்புமணி, ஏ.கே. மூர்த்தி, இலங்கை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
திட்டக்குழுத் தலைவர் நாகநாதன், மருத்துவர் முகிலன், தமுமுக ஹைதர் அலி, பாக்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணு, மகேந்திரன், பா.ஜ.க. தலைவர் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராசன், விவசாயŠதொழிலாளர் கட்சித் தலைவர் பொன்.குமார், தாவூத் மியான்கான், அகில இந்திய சமத்துவக் கட்சி என்.ஆர். தனபாலன், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்,

இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் கோவைதம்பி, மூவேந்தர் முன்னணி பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, நாம் தமிழர் இயக்கம் பேராசிரியர் தீரன், பழ. நெடுமாறன் சார்பில் அவரது மகள் பூங்குழலி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கே.எஸ். அழகிரி, இராமசுப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் சபா. இராஜேந்திரன், ஜெயக்குமார், நக்கீரன் கோபால்,கவிஞர்கள் வைரமுத்து, இன்குலாப், அறிவுமதி,தணிகைச்செல்வன், மு.மேத்தா, கபிலன், காசிமுத்து மாணிக்கம், திரைப்படத் தயாரிப்பாளர்கள் காஜாமொய்தீன், கே.ராஜன், திரைப்பட இயக்குநர் புகழேந்தி, நடிகை குஷ்பு, சுந்தர் சி, கிறிஸ்துதாஸ் காந்தி, ஐ.ஏ.எஸ். முன்னாள் நடுவண் அமைச்சர் தலித் எழில்மலை, முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ், வீ.கே.டி. பாலன், வெள்ளையன் சார்பில் டைமண்ட் ராஜ், மோகன், கமலா திரையரங்க உரிமையாளர் வி.என். சிதம்பரம், தேனிசைச் செல்லப்பா உட்பட அரசியல், திரையுலக பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திரு. தொல்காப்பியன் அவர்களின் திருவுடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி அஞ்சலி செலுத்தினார். ஏராளமான பொதுமக்களும், விடுதலைச் சிறுத்தைகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை (17Š07Š2010) காலை 11 மணியளவில் அங்கனூரில் தொல்காப்பியன் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: