வெள்ளி, 16 ஜூலை, 2010

24 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு 1 கோடியே 58 லட்சம் பரிவுத்தொகை வழங்கினார் கலைஞர்

24 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு 1 கோடியே 58 லட்சம் பரிவுத்தொகை வழங்கினார் கலைஞர்
24 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு இன்று 1 கோடியே 58 லட்சம் பரிவுத்தொகை வழங்கினார் முதல்வர் கருணாநிதி.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

‘’தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ச்சமுதாய முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட சான்றோர்களின் படைப்புகள் மக்கள்
அனைவரையும் சென்று அடைதல் வேண்டும் என்னும் சீரிய நோக்கத்துடன் சிறந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, 

அவர்கள் படைத்துள்ள நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின்
பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் மரபுரிமையர்க்குப் பரிவுத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி சிறப்பாகவும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.

இத்திட்டத்தின் படி 2006 ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் 87 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கி, 

அவர்களுடைய மரபுரிமையர்க்கு 5 கோடியே 70 லட்ச ரூபாயை பரிவுத்தொகையாக வழங்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து 2010-2011 நிதிநிலை அறிக்கையில் மேலும் 22 தமிழ்ச்சான்றோர் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என
அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் ரசிகமணி, டி.கே.சிதம்பரநாத முதலியார் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என 23.6.2010 அன்று முதல்வர்
கருணாநிதி அறிவித்து ஆணையிட்டார்.

இவ்வாறு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்பட்ட 23 தமிழறிஞர்களின் அருதனக்குட்டி அடிகளாரின் மரபுரிமையர் தவிர மற்ற 22
தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் அரசுக்கு உரிய சான்றாவணங்களை வழங்கியுள்ளனர்.

அவர்களுடன் 2009, 2010 ம்  ஆண்டில் நாட்டுடைமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அப்பொழுது சான்றாவணம் 
அளிக்கப்படாமையால் பரிவுத்தொகை வழங்கப்படாமல் இருந்த  பேராசிரிய வையாபுரிப்பிள்ளை,  ஜே.ஆர்.ரங்கரஜு ஆகியோரின் மரபுரிமையர்களும் தற்போது சான்றாவணங்களை அளித்துள்ளனர்.

இந்த சான்றாவணங்களின் அடிப்படையில் படைப்புகள் நாடுடைமையாக்கப்பட்டுள்ள பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம்,
பேராசிரிய அ.கிருஷ்ணமூர்த்தி, நெ.து.சுந்தரவடிவேலு, மயிலை சிவமுத்து,ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் ஆகிய 5 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்குத் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் 50 லட்சம் ரூபாய்.

டாக்டர் எஸ்.எம்.கமால், பேராசிரியர் ர.சீனிவாசன், டாக்டர் சி.பாலசுப்பிரமணியன், அ.திருமலை முத்துசாமி,  கவிஞர் தாராபாரதி,
சரோஜாராமமூர்த்தி  ஆகிய 6 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்குத்தலா 7லட்சம் வீதம் 42 லட்சம் ரூபாய்.

பா.ராமசாமி, காழி.சிவகண்ணுசாமி பிள்ளை ,  கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியன், தஞ்சை ராமையாதாஸ்,அ.சீனிவாசன்
ஆகிய 5 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு தலா 6 லட்சம் ரூபாய் 30 லட்சம் ரூபாய்.

வெள்ளியங்காட்டான், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை ஆகிய 2 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்குத்தலா 3 லட்சம் ரூபாய் வீதம்
6 லட்சம்  ரூபாய் என 24 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு இன்று மொத்தம் ஒரு கோடியே 58 லட்சம் ரூபாய்

பரிவுத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்துகள் கூறி மகிழ்ந்தார்.

தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் அனைவரும் முதல்வர் கருணாநிதியை வாழ்த்தினர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: