thetimestamil.com பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி
நிறுவனம், சமீபத்தில் விநியோகித்திருக்கும் விண்ணப்பம் சர்ச்சைகளை
ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஊழியர் சேர்க்கைக்கான
விண்ணப்பப் படிவத்தில் திருமணம் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.
அதில், திருமணமாகாதவரா? கணவர்/மனைவியை இழந்தவரா? கன்னித்தன்மை இழக்காதவரா?
என கேட்கப்பட்டுள்ளன. மேலும் எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள் போன்ற
கேள்விகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இது செய்தி ஊடகங்களில் வெளியாகி சமூக
வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக