திங்கள், 31 ஜூலை, 2017

அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகை? அமைச்சர் காமராஜ் பரப்பும் வதந்தி?

அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?” என கேள்வி எழுப்பியுள்ளார் எழுத்தாளரும் திமுக நட்சத்திர பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன். தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருமானவரி செலுத்துபவர் ஒருவர் இருக்கும் குடும்பங்கள், ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுகெல்லாம் இனி ரேஷன் கிடையாது என தமிழக அரசின் கெஸட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் உணவு அமைச்சர் காமராஜ் தற்போதைய பொது வினியோக திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது, மத்திய அரசின் வினியோகத்திட்டம் தமிழகத்திற்குப் பொருந்தாது என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழக அரசின் கெஸட் என்பது மாநில அரசின் அதிகார பூர்வ பிரகடனம் இல்லையா?
அதில் வந்தது நடைமுறைப்படுத்தப்படாது என்று சொல்வதை எப்படி புரிந்து கொள்வது? மத்திய அரசுக்கு பணிந்து அவர்கள் கொடுத்த திட்டத்தை அப்படியே அரசிதழில் வெளியிடுவது,. வெளியே மக்களுக்கு பயந்து அதையெல்லாம் நடைறைப்படுத்த மாட்டோம் என்று சமாளிப்பது.

தங்களது அரசு கெஸட்டில் வந்த ஒன்றை வீண் வதந்தி என்று அந்த அரசின் அமைச்சரே சொல்வதைவிட கேவலம் ஒன்றுண்டா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.thetimestamil.com

கருத்துகள் இல்லை: