சனி, 5 ஆகஸ்ட், 2017

காங்கிரஸ் விஜயதரணி தினகரனை சந்தித்தார்!.. அதிமுக - காங்கிரஸ் இயற்கைக் கூட்டணியாம்!

புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்று வரும் நிலையில்... திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி இன்று ஆகஸ்டு 5 ஆம் தேதி சென்னையிலுள்ள தினகரனின் வீட்டுக்குச் சென்று தினகரனை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜயதாரணி, ‘’தினகரனது மாமியார் மறைவுக்கு துக்கம் விசாரிப்பதற்காக வந்தேன். அதிமுகவை இன்றைக்கு மத்திய பாஜக அரசு தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதிமுக மீது அழுத்தத்தையும் அச்சுறுத்தலையும் பாஜக திணித்து வருகிறது.( திருநாவுக்கரசு சிஸ்டம் ?)
எனவே மற்ற யாவரையும் விட இன்று அதிமுகவே பாஜகவை அதிகம் எதிர்க்க வேண்டிய கட்சியாக இருக்கிறது. அந்த வகையில் பாஜகவை எதிர்த்து நிற்பதற்கு எனது ஆதரவையும் தினகரனுக்கு சொல்லிவிட்டு வந்தேன். அதிமுக காங்கிரஸ் கூட்டணி என்பது எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே இயற்கை கூட்டணியாக அமைந்து வந்துள்ளது. எனினும் இப்போது தினகரனுடன் நான் அரசியல் எதுவும் பேசவில்லை’’ என்று கூறினார் விஜயதாரணி! மின்னம்பலம்


கருத்துகள் இல்லை: