அந்தமனுவில் சர்மா கூறியுள்ள தாவது:
காங்கிரசைச் சேர்ந்தசீதாராம் சிங், 1991ல், கொலை செய்யப்பட்டார். அரசியல் காரணங்களுக்காக நடந்த இந்த கொலையில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது.
நிதிஷ்குமார் போட்டியிட்ட பல தேர்தல்களில், வேட்பு மனு தாக்கலின் போது, தன் மீதான கிரி மினல் வழக்கு குறித்து தெரிவிக்காமல், அதை மறைத்துள்ளார்.தேர்தல் கமிஷன் விதிமுறைகளின் படி, தன் மீதான வழக்கு விபரத்தை மறைத்த, நிதிஷ் குமாரின், எம்.எல்.சி., பதவி பறிக்கப்பட வேண்டும். அவர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, அவரிடம் விரிவான விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு உத்தர விட வேண்டும்; இதை, அவசர வழக்காக ஏற்று, உடனடியாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பட்டியலிடப்படும்
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தீபக் மிஸ்ரா,அமிதவ ராய் மற்றும் எம்.எம்.கன்வில்கர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ப தாக அறிவித்துள்ளது.'வழக்கு எண் பட்டிய லிடப்பட்டு, அதற்கான முறை வரும் போது, விசாரணை நடத்தப்படும்' என, நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக