சனி, 5 ஆகஸ்ட், 2017

ஜோதி குப்தா ..அரியானா: தண்டவாளத்தில் பிணமாக கிடந்த இந்திய ஆக்கி அணி வீராங்கனை

அரியானாவில் இந்திய ஆக்கி அணி வீராங்கனை ஜோதி குப்தா ரெயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அரியானா: தண்டவாளத்தில் பிணமாக கிடந்த இந்திய ஆக்கி அணி வீராங்கனை அரியானா: அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச ஆக்கி வீராங்கனை ஜோதி குப்தா. இந்திய அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடி வருகிறார். ஆசிய போட்டியில் விளையாடி உள்ளார். 20 வயதான அவர் கடந்த 2-ந்தேதி ரோடாக்கில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழில் உள்ள பெயர் எழுத்து பிழைகளை சரி செய்ய செல்வதாக பெற்றோரிடம் கூறியபடி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் ரெவாரி ரெயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். ஜோதி குப்தா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மாலைமலர்

கருத்துகள் இல்லை: