வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

50 ஆண்டுகளில் இந்தியாவின் பாதி மொழிகள் அழிந்துவிடும்!

அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் பேசப்பட்டு வரும் மொழிகளில் பாதிக்கும் மேல் அழிந்துவிடும் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தற்போது 780க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இதில் ஒருசில மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை என்பது குறைவாகவே உள்ளது. இது தொடர்பாக பீப்பில் லிங்கிஸ்டிக் சர்வே ஆப் இந்தியா அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வின் முடிவுகள் தொடர்பாக 11 தொகுதிகள் அடங்கிய குறிப்பை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவில் பேசப்பட்டு வரும் மொழிகளில் பாதிக்கும் மேல் அடுத்த 50 ஆண்டுகளில் அழியக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 250 மொழிகள் அழிந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவலும் இடம்பெற்றுள்ளது. ஒரு மொழி அழியும்போது அது சார்ந்த கலாச்சாரமும் அழிந்து போகிறது. கல்வியறிவின்மை, பள்ளி செல்லாத காரணத்தால், பழங்குடியின மக்கள் மொழிகள் அழியும் ஆபத்து அதிகம் உள்ளது. இதில் ஆயிரம் வருஷம் பழமையான இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற மைதிலி (பீகார்) உட்பட 22 பழங்குடியின மொழிகள் அழியும் நிலை உள்ளது.

மேலும், பிற மொழிகளின் தாக்கத்தால், அவை திணிக்கப்படுவதாலும் பூர்வீக மொழிகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பழங்குடியினர் பேசும் மொழிகளைக் காக்க அனைவரும் தோள் கொடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. உலக அளவில் பேசப்படும் 6000 மொழிகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் பீப்பில் லிங்கிஸ்டிக் சர்வே ஆப் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இந்தப் பணி 2025ம் ஆண்டு முடிவடையும் என்று கூறப்படுகிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: