Amudhavalli
Oneindia Tamil
பெங்களூரு: குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக 44 எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பெங்களூரு ரிசார்ட் மற்றும் கர்நாடக மாநில எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரும் 8ம் தேதி குஜராத் மாநிலத்தில் ராஜ்ய சபா எம்பி தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் பெங்களூரில் உள்ள ஈகிள் கோல்ப் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tax raids at resort where Guj MlAs are lodged in Karnataka
இந்தச் சொகுசு ரிசார்ட்டில் இன்று வருமானவரித்துறையினர் அதிரடியான ரெய்டு நடத்தி வருகின்றனர்.
மேலும், அம்மாநில எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஐடி துறையினர் மூலம் ரெய்டு நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக