விவேக் மாவோயிஸ்ட்
அப்துல் கலாம் ஐயர் என்கிற போலி 'மனு' விஞ்ஞானி
by Krishna Tamil Tiger on Sunday, September 23, 2012 at 10:32pm ·
ஒரு எட்டு ஆண்டுகாலம் ஐரோப்பாவின் சில முன்னணி ஆராய்ச்சி கூடங்களிலும், பல்கலைகழகங்களிலும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டபின் நம் திடீர் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பற்றிய இந்த சிறு குறிப்பை வரைவது சாத்தியப்பட்டும், இந்த கணத்தில் அவசியமாகியும் இருக்கிறது. முதலில் ஆராய்ச்சியும், விஞ்ஞானமும் ஒரு பரந்து விரிந்த கடலைப்போன்றது, அதாவது விஞ்ஞானத்தில் ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்கும் இடையேயான வேறுபாடு வானுக்கும் பூமிக்கும் இருக்கும் வித்தியாசத்தை விட சற்றே அதிகமானது.
நான் மூளை (நரம்பியலில்) கார்டெக்ஸ் (cortex) என்னும் பகுதியில் சிந்தனை (thinking), நியாபக சக்தி (memory), கற்றறிதல் (learning) போன்றவற்றிற்கு காரணமான ஜீன்களை (genes ) பற்றியதான ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறேன். எனது பக்கத்து இருக்கையில் எனது தோழன் அதே செயல்களுக்கு காரணமான ஜீன்களை பற்றி மூளையின் மற்றுமொரு பகுதியில் ஆராய்ச்சி செய்து வருகிறான். எனினும் எங்கள் இருவரின் ஆராய்ச்சி முடிவுகளுக்கும் இடையிலான வேறுபாடு முன்பே குறிப்பிட்டதைப்போல கடல் அளவிலானது. இரண்டையும் ஒப்பிடுவதும், இரண்டிற்கும் பொதுவான ஒரு கருத்தியலை உருவாக்குவதும் இயலாத ஒன்று; விஞ்ஞான தர்மப்படி அது நியாயமும் இல்லை.
மூளைக்குள்ளும், மருத்துவ உயிரியல் எனும் ஒற்றை சொல்லுக்குள்ளும் இத்துணை வேறுபாடுகள் இருக்கும் போது அறிவியலின் இரு வேறு துருவங்களான/துறைகளான ராக்கெட் விஞ்ஞானத்துக்கும், அணு விஞ்ஞானத்துக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாத ஒன்று. நியூட்டனின் நகர்தல் விதி (law of motion) எனும் அடிப்படை தத்தவத்தை மையப்பொருளாக கொண்டு இயங்குவது ராக்கெட் விஞ்ஞானம்; அணுவுக்குள் அடங்கி கிடக்கும் அணுக்கருவை பிளப்பதால் வெள்ளப்பெருக்கெடுக்கும் கதிரியக்கத்தையும், வெப்பத்தையும் அடிப்படையாக கொண்டு இயங்குவது அணுவிஞ்ஞானம். ராக்கெட்டுகளும், அணுகுண்டுகளும் மனித மாமிசம் விற்கும் நர மாமிச கடைகளிலும், நர மாமிச வியாபாரிகளிடமும் ஒன்றாக கிடைக்கும் என்பதைத்தவிர இந்த இரண்டிற்கும் வேறெந்த தொடர்பும் இல்லை. இப்படியாக, அணுவுக்கும், ராக்கெட்டுக்கும் இந்த உலகத்திலே இருக்கும் ஒரே தொடர்பு நமது அப்துல் கலாம் மட்டுமே.
சரி, இந்த எல்லைதாண்டும் விஞ்ஞானி கலாமின் சொந்த துறை சார்ந்த ராக்கெட் அறிவியல் சாதனைகளை தேடி பார்க்கலாமென்றால், ஒரு விஞ்ஞானியின் திறனானது அவரின் ஆராய்ச்சி முடிவுகளின் கட்டுரைகளையும், அந்த கட்டுரைகள் வெளியான அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அறிவியல் சஞ்சிகைகளையும் (scientific journals), அதற்கு வழங்கப்பட்டு இருக்கும் தரப்பட்டியலையும் சார்ந்தே முடிவு செய்யப்படும். ஆனால் விஞ்ஞானி காலமின் ஆராய்ச்சி முடிவுகள் பற்றிய ஒரு பக்கத்தை கண்டுபிடிக்கவே பல வாரங்கள் பிடித்தது. ஏனெனில் அவருடைய கட்டுரைகள் அனைத்தும் பூ பேசியது, குழந்தை வடை சுட்டது, கிளிமாஞ்சாரோ கவிதைகள் போன்ற விஞ்ஞானத்துக்கு முற்றிலும் தொடர்பற்ற ஃபேன்டசி வகையறா சார்ந்து இருந்தது. நான் அறிந்தவரை அவருடைய (மூன்றே மூன்று) கட்டுரைகள் இந்திய அறிவியல் பத்திரிக்கைகளை ஒருபோதும் தாண்டியதில்லை. இந்திய அறிவியல் பத்திரிக்கைகளின் தரப்பட்டியல் (impact factors) பெரும்பாலும் சர்வதேச அளவில் ஒன்றுக்கும் குறைவே. பத்துக்கு குறைவான மதிப்பீடு கொண்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவதில்லை என்பது எங்களது ஆராய்ச்சி குழுவில் நாங்களே நிர்ணயம் செய்துகொண்ட எழுதப்படாத விதி.
இப்படியாக, முன்னால் ராக்கெட் விஞ்ஞானியின் அறிவியல் ஆராய்ச்சியும் (பெரிதாக) மெச்சும் படி இல்லை. தன்னுடைய துறையிலேயே உலகின் சிறந்த கண்டுபிடிப்புக்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் வெளிக்கொணர இயலாதவர், மாற்று அறிவியல் துறையான அணு விஞ்ஞானத்தை பற்றி வார்த்தை ஜாலங்களை அள்ளி தெளிப்பது அதிர்ச்சியான ஆச்சரியம். ஏனெனில் விஞ்ஞானம், ஆராய்ச்சி துறைகளுக்கு என்று ஒரு அடிப்படை தொழில் தர்மம் இருக்கிறது. எனது ஆராய்ச்சி கூட பக்கத்து அறைகளின் நோபல் பரிசுவரை பரிந்துரை செய்யப்பட்ட விஞ்ஞானிகள் கூட எங்களின் துறை சார்ந்த விடயங்கள் என்று வரும் பட்சத்தில் எங்களை அழைத்து கருத்தறிவார்கள், தான்தோன்றித்தனமான கருத்துக்களை மறந்தும் உதிர்ப்பதில்லை. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளாகவே இருந்தாலும், அடுத்தவர் துறை தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கைகளையோ, முடிவுகளையோ தெரிவிப்பது விஞ்ஞானத்தில் தடை செய்யப்பட்டும் இருக்கிறது. ஏனெனில், 'இருக்கலாம்' என்ற இடத்தில் 'இருக்கிறது' என்ற வார்த்தை பிரயோகம் கூட விஞ்ஞானத்தில் முற்றிலும் தடைசெய்யப்பட்ட ஒன்று.
இப்படியாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, அணுத்துறை அறிவியல் பற்றி கருத்து கூறுவது சைக்கிள் டயர் பஞ்சர் பார்ப்பவன் கப்பல் டயர் பஞ்சர் பார்ப்பதை பற்றி பாடம் எடுப்பதற்கு சமம். அணு உலை துவங்க உலக அணுசக்தி கழகம் (IAEA) விதிக்கும் அடிப்படை கட்டுப்பாடுகள், விதிகளில் ஒரு பதினான்கில், எட்டை கூட பூர்த்தி செய்யாத ஒரு அணு உலைக்கு, விஞ்ஞானி கலாம் ரப்பர் ஸ்டாம்ப் அடிப்பது விஞ்ஞானத்தையே கேவலப்படுத்தும் செயலேயன்றி வேறேதுமில்லை. பெரிதும் அறிவியல் ஆராய்ச்சியில் சோபிக்காமல் எவ்வாறு இந்திய அறிவியலில் இவ்வளவு உயரத்திற்கு வர இயலும் என்பதை பற்றியெல்லாம் விவாதித்து தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் கயிற்று கட்டிலில் அமரும்போது எம்.எஸ்.சுவாமிநாத ஐயர்கள் பசுமை புரட்சியின் தந்தையாகி குளிரூட்டப்பட்ட கக்கூசில் அமரும் தேசம் இது.
முதலில் ராக்கெட் விஞ்ஞானத்தில் இந்தியாவின் நிலை என்னவென்று அறிந்தாலே அது ஒரு பரிதாபகரமான நிலை. இந்தியாவின் நலனை, சந்தை பொருளாதாரத்தை, வர்த்தகத்தை மேற்கத்திய நாடுகளிடம் அடமானம் வைத்து, ராக்கெட்டின் உதிரி பாகங்களை அந்த நாடுகளிடமிருந்து பெற்று, இங்கே அசெம்பிள் (இணைப்பதே) செய்வதே என்பது ஊரறிந்த, உலகறிந்த 'ரகசிய' உண்மை. ஆகவே அந்தவகையில், வெளிநாட்டு கார்களின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அந்த கார்களை வடிவமைக்கும் கோவை மற்றும் புதுப்பேட்டை பகுதிகளில் இருக்கும் எட்டாப்பு வரை படித்த மெக்கானிக்குகளும் கலாம் போன்ற விஞ்ஞானிகளே. ஆனால் அதை மறைத்து ராக்கெட் விஞ்ஞானத்தில் இந்தியா உலக வல்லரசு என்று கட்டுக் கதைகளை கட்டி, ஊடகங்கள் மூலம் அந்த புளுகுமூட்டைகளை பொன் முட்டைகளாக மாற்றியதில் கலாம்களின் பங்கு அளப்பெரியது. இப்படியாக கோடி கோடியாக மக்களின் வரிப்பணத்தில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் பிற்காலத்தில் பெரு முதலாளிகளிடமும், அரசியல் கோமான்களிடமும் சிக்கி ஸ்பெக்ட்ரம்களாக உருமாறி பலரின் அந்தப்புரங்களை அலங்கரித்தது நம் கண் முன்னே நிற்கும் வரலாறு.
இங்கே கலாம் உருவான கதைதான் சுவாரசியமானது. பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்று அதன் இந்துத்வா முகம் மறைக்க அவர்களுக்கு ஒரு இஸ்லாமிய முகமூடி தேவைப்பட்டது. அந்த முகமூடியும் சுயம் தொலைத்த ஒரு அடிமையாக இருக்கவேண்டும் என்ற தேவையின் போது அவர்களுக்கு சிக்கிய மிகச்சிறந்த முகமூடிதான் இந்த கலாம். அவர் எவ்வளவு தூரத்துக்கு அடிமையாக இருக்க முடியும் என்பது இவருடைய ஜனாதிபதி (முப்படை தளபதி) காலத்தில் நிகழ்ந்த அவரின் சொந்த இஸ்லாமிய மதத்தினரின் குஜராத் படுகொலைகளும், தமிழீழ இனப் படுகொலைகளுக்கு நடந்த ஆயத்த ஏற்பாடுகளுமே சான்று.
ஆனால், இதில் ஒரு சூட்சுமம் பிடிபடும், அறிவியலில் சோபிக்காமல் போயிருந்தாலும் இவர் யாரை பிடித்தால் எதை அடையலாம் என்ற நுட்பமான அரசியலில் கைதேர்ந்தவர். ஆரிய சமாஜத்தின் உறுப்பினர் ஆனதும், சங்கராச்சாரிகள் இவரை பலமுறை 'இவா நம்மவா' என்றதும் அதன் எச்சங்கள்தான். ஜனாதிபதி பதவி இழந்ததும், அடுத்த இரண்டு முறையும் ஜனாதிபதி தேர்தலின் போது தான் வேட்பாளராக முன்மொழியப்படக்கூட வாய்ப்பில்லை என்று நன்றாக அறிந்திருந்தும், யாருடைய மனதையோ குளிரூட்ட(!) இவர் அவசரவசரமாக ஈழம் சென்று 'வடக்கில் வசந்தம்' வர பாடுபட்டதும் (இதுநாள்வரை இறந்த ஒரு பிஞ்சுக்கு கூட வருத்தம் தெரிவித்ததில்லை என்பது நினைவிருக்கட்டும்), கூடங்குளம் விரைந்து அணுவுலையில் 'எல்லாம் சுபமே' சான்றிதழ்களை வழங்கியும் ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்புக்காக அல்லாடியது அரசியல் அடிப்படை தெரிந்த அனைவருக்கும் புரிந்திருக்கும்.
பல ஆயிரம் சதுர அடிகள் கட்டிட அமைப்பு கொண்ட அணுவுலையின் சுவர் விரிசல், கீறல், பெயிண்ட், வார்னீஷ் போன்றவற்றை சரிபார்த்து அறிக்கை கொடுக்க கூட ஒரு மேஸ்திரிக்கு நான்கு நாட்கள் பிடிக்கும் என்ற நிலையில், அணுக்கரு அறிவியலில் அடிப்படை அறியாத, எந்த தொடர்பும் இல்லாத அப்துல் கலாம், உலையை பார்வையிட்ட அன்று மாலையே (தயாரிக்கப்பட்ட) அறிக்கை கொடுப்பது அயோக்கியத்தனமன்றி, வேறென்னவாக இருக்க முடியும்?
பல ஆண்டுகள் அறிவியல் துறையில் பணியாற்றியவர் விஞ்ஞானத்தில் மாற்று துறைகளில் மூக்கை நுழைக்க கூடாது என்ற அடிப்படை விதிகளை அறியாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை, அப்படி இருந்தால் ஒன்று அவர் முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது தெரிந்தே இந்த அயோக்கியத்தனத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நல்லவேளை, அப்துல் கலாம் இருப்பது இந்தியா, மேற்கத்திய நாடுகளாக இருந்திருந்தால் இந்த அயோக்கியத்தனத்திற்கு அவருடைய முந்தைய டாக்டர் பட்டமும் பறிபோய் இருக்கும், ஆனால் இங்கே தேசத்தின் நலனையும், தேசத்தின் பிள்ளைகளின் நலனையும் அந்நியர்களிடம் அடமானம் வைக்கும் எவருக்கும் ராசபோக மரியாதை உண்டு; அது மற்ற எவரையும் விட விஞ்ஞானி கலாமுக்கு நன்றாக தெரியும்!
அப்துல் கலாம் பற்றி தோழர் அமுதன் ராமலிங்கம் அழகாக இப்படிச் சொல்லி இருந்ததை இங்கே நினைவு கூற வேண்டும், ''லோகத்தில் பிரச்சனை இல்லை, நீ நன்னா படிச்சா பெரியாளாயிடலாம், அதுக்கு நானாக்கும் சாட்சி''. இப்படியாக, பொய்களையும், புரட்டுக்களையும், கட்டுக்கதைகளையும், நயவஞ்சக கவிதைகளும் பேசி பிஞ்சு குழந்தைகளை கண்மூடித்தனமாக, ஏன் எதற்கு என்ற உணர இயலாத, பகுத்தறிவற்ற தேச பற்றாளர்களாக்கி, அதன் மூலம் அவர்களே அறியா வண்ணம் அந்த பிஞ்சுகளை இந்த தேசத்தை ஆளும் முதலாளிகளிடம் அடிமையாக்கி வரும் கலாம்கள் சாத்தான்களின் தூதுவர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல! திருக்குரானில் சொல்லப்பட்டு இருப்பதை போல சாத்தான்களை கற்களை கொண்டு அடித்து துரத்தவேண்டும் என்பதும் இங்கே கடைபிடிக்கப்படும் மரபல்ல, ஏனெனில் இது மனுதர்மம் பேணும் தேசம்!!!
அப்துல்கலாம் எஎன்ற ஆளும் வர்க்க எஎடுபிடி அணுவிஞ்ஞானி ஆக்கப்பட்ட கதை!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக