* வருமான வரி செலுத்தக்கூடிய ஒரு நபரைக்கொண்ட குடும்பத்திற்கும், தொழில் வரி செலுத்துபவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பத்திற்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.
* மத்திய, மாநில அரசு ஊழியர்களூக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.
* குளிர்சாதனப்பெட்டி வைத்திருக்கும் குடும்பத்தினருக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.
* ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை.
* 3 அறைகளுக்கு மேல் வீடுகளை வைத்திருப்போருக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.
* நான்கு சக்கர மோட்டார் வாகனம் வைத்துள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.
* 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை.
* ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை.
* நகர்புறம் - அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் உண்டு
. * வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை
. * விதவை, திருமணம் ஆகாத பெண்களை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பத்தினருக்கு பொருட்கள் உண்டு.
* நகர்புறம் - வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களூக்கு ரேஷன் பொருட்கள் உண்டு.
* நகர்புறம் - முதியோர் உதவித்தொகை திட்ட பயனாளிகள் போன்ற பயனாளிகளுக்கு பொருட்கள் உண்டு. நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக