புதன், 4 நவம்பர், 2026

சமஸ்கிருத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்ல திருமண விழா: இதயம் வலிப்பதாக திராவிட இயக்கத்தினர் கடும் கோபம்

Kulitalai Mano ; திமுக வின் கலாச்சாரத்தை துரைமுருகன் மாற்றினார் என நினைத்தால் நாம் முட்டாள் தலைமை யின் குடும்பத்தில் ஆரம்பித்த கோணல் திமுக வின் அடித்தளத்தை அசைத்திருக்கிறது ஒரு கோடிக்கும் மேலான தொண்டர்களைக் கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவர் வீடு அந்த வீட்டில் கொலு நடத்தி பார்ப்பனர்களை வரவேற்று தட்சணை தரும் நிலையில் துர்கா வின் நம்பிக்கையில் தலையிடமாட்டோம் என்ற Escapeism இன்று இந்த தைரியத்தை துரைமுருகனுக்கு தந்திருக்கிறது கட்சி வேண்டும்னு நினைச்சா மாறுங்க இல்லை எனில் கட்சியை கலைச்சிடுங்க

 தினமலர் : சென்னை: தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் இல்ல திருமண விழா, சமஸ்கிருத மந்திரம் ஒலிக்க நடைபெற்றதால், தி.மு.க., முன்னாள் எம்.பி., செந்தில்குமார், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் புலம்பி வருகின்றனர்.


தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின் மகனும், வேலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி.,யுமான கதிர் ஆனந்த்தின் மகள் செந்தாமரை - தீபக் ரவி திருமணம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
சனாதனம்
மேலும், தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை உட்பட அரசியல் பிரபலங்களும், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

திரைப்பட இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசைக்கச்சேரி, மாதம்பட்டி ரங்கராஜின் தடபுடல் விருந்து என, பிரமாண்டமாக திருமண விழா நடந்தது. இந்த திருமண விழா, வேத மந்திரங்கள் முழங்க, சனாதன முறைப்படி நடந்ததால், தி.மு.க.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் சுயமரியாதை திருமணத்தை தி.மு.க., வலியுறுத்தி வருகிறது. அதை சட்டமாக்கியதாகவும் அக்கட்சி பெருமை பேசுகிறது. மேலும், சனாதன தர்மத்தை ஒழிக்கப்போவதாக, அக்கட்சியின் உதயநிதி கூறி வருகிறார். ஆனால், அக்கட்சியில் தலைவருக்கு அடுத்த உயர்ந்த பொறுப்பான பொதுச்செயலர் பதவியை வகிப்பவரும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல், தி.மு.க.,வில் இருக்கும் மூத்த தலைவருமான துரைமுருகனின் வீட்டு திருமணம், வேத மந்திரங்கள் முழங்க நடந்தது.

திருமணத்தில், சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, வைதீக முறைப்படி சடங்குகள் நடந்தன. இது, தி.மு.க., மற்றும் தி.க.,வினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கொள்கை பிடிப்பு

திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் வெளியிட்ட பதிவில், 'என்னிடம் பேரன்பு காட்டும்- தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில், சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் என் இதயம் வலிக்கிறது' என கூறியுள்ளார்.

தி.மு.க., முன்னாள் எம்.பி., செந்தில்குமார், 'மேடைகள் தோறும் சுயமரியாதை திருமணங்களை பிரகடனப்படுத்திய, கொள்கை பிடிப்புள்ள கட்சியில், அதை கடைப்பிடிக்க கூடிய வாய்ப்பை தவறவிட்டதில், தனிப்பட்ட முறையில் நான் உடன்படவில்லை' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: