அதிமுக இரு அணிகளும் இணைய பேச்சு நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் ஆவதாக செய்தி
வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு அதிமுக இரு அணிகளும் இணைய பேச்சு நடத்த முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கடந்த ஒரு மாதத்தில் முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் பிரதமர் நரேந்திர மோடியை 3 முறை சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து இரு அணிகளையும் இணைக்க பேச்சு தீவிரமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பில் இது மறுக்கப்பட்டாலும் இரு அணிகளும் இணைய முயற்சிகள் நடப்பதாக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இரு அணிகளும் இணைய முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக ஆங்கில
செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி முதல்வராக
பழனிசாமி தொடர் வார் என்றும் ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் முக்கிய பதவியுடன்,
மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிப்பது என முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது. அதிமுக இரு அணிகளும் இணைந்தால் மத்திய அமைச்சரவையில் இணைவது
உறுதி என்றும் அப்போது ஓபிஎஸ்ஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும்
எனவும் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகியுள்ளது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக