சனி, 5 ஆகஸ்ட், 2017

இந்தியாவை தவிர வேறெங்கும் கையால் மலம் அள்ளுவது கிடையாது .. தொழில்நுட்பம் ... அங்கெல்லாம் சாதி இல்லை!


kalaimarx/ மேற்க‌த்திய‌ நாடுக‌ளில், ஒரு கால‌த்தில் இருந்த‌, கையால் ம‌ல‌ம் அள்ளும் தொழில் இல்லாதொழிக்க‌ப் ப‌ட்ட‌து எவ்வாறு? அது ந‌க‌ர‌த் திட்ட‌மிட‌லில் ஒரு ப‌குதி. அது ப‌ற்றிய‌ சிறிய‌ விள‌க்க‌ம், ப‌ட‌ங்க‌ளுட‌ன்.
எல்லா வீடுக‌ளில் இருந்தும் செல்லும் க‌ழிவு நீர் குழாய்க‌ள், நில‌க் கீழ் சுர‌ங்க‌ப் பாதைக்கு செல்கின்ற‌ன‌. அந்த‌ நில‌க் கீழ் குழாய்க‌ள், ம‌ழை நீரையும் சேர்த்துக் கொண்டு, சுத்திக‌ரிப்பு ஆலையை நோக்கி செல்கின்ற‌ன. அங்கு ந‌ன்னீர் பிரித்தெடுக்க‌ப் ப‌டுகின்ற‌து.
சுத்திக‌ரிப்பு ஆலையும், சுர‌ங்க‌ப் பாதைக் குழாய்க‌ளும் தானிய‌ங்கி முறையில் இய‌க்க‌ப் ப‌டுகின்ற‌ன‌. இந்த‌ப் பொறி முறையில் ம‌னித‌ உழைப்பு மிக‌வும் குறைவாக‌ உள்ள‌து. அநேக‌மாக‌ தொழில்நுட்ப‌ ப‌யிற்சி பெற்ற‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே வேலை செய்கிறார்க‌ள்.

நெத‌ர்லாந்தில் ஹார்ல‌ம் ந‌க‌ரில் உள்ள‌ க‌ழிவு நீர் அக‌ற்றும் பொறிமுறையை காட்டும் விள‌க்க‌ப் ப‌ட‌ங்க‌ள் இவை. அந்த‌ ந‌க‌ரில் ம‌ட்டும் அமைக்க‌ப் ப‌ட்டுள்ள‌ மொத்த‌ சுர‌ங்க‌ப் பாதை குழாய்க‌ளின் நீள‌ம், கிட்ட‌த்த‌ட்ட‌ 500 கிலோ மீட்ட‌ர்க‌ள். அதாவ‌து, பாரிஸ் செல்லும‌ள‌வு தூர‌ம்!

கருத்துகள் இல்லை: