ராத்திரியோட ராத்திரியா மெரினாவுல இருந்த சிவாஜி சிலையை தூக்கிட்டானுங்க... இன்னும் சிவாஜி ரசிகருங்க மட்டும்தான் போராடலன்னு அவங்களுக்கு ஃஆபர் கொடுத்துருக்கானுங்க...
சிலை உறுத்தலா இருக்குன்னு நினைச்ச ஜெயலலிதாவேதான் இப்ப இல்லையே எதுக்காக சிலையை தூக்கிட்டானுங்க?
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், 2006-ம் ஆண்டு, நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் சிலை நிறுவப்பட்டது.
பின்னர், அந்தச் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என அகற்ற முடிவு செய்யப்பட்டது. அப்போது, 'சிவாஜி சிலையை அகற்றக்கூடாது' என்று சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அங்கிருந்து அகற்றபட்டால், அதே சாலையில் வேறு இடத்தில் வைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசு, சிவாஜி சிலையை அடையாற்றில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் சிவாஜி மணிமண்டபத்தில் நிறுவப்படும் எனக் கூறியது. இதற்குத் தடை கோரி தாக்கல்செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிலையை அகற்ற தடை இல்லை என உத்தரவு பிறப்பித்தது.
இன்னைக்கு என் சிலையை தூக்கின அத்தனை பயலுவளும் அன்னைக்கு எங்காத்தா கண்ணகியோட சிலையை தூக்கின பயலுவள்தாய்ன் .. அன்னைக்கு விதி விளையாடி கண்ணகி சிலையை மறுபடியும் இருந்த இடத்திலேயே கொண்டார வச்சதே.....மறந்துட்டானுவளே...
இதையடுத்து, நேற்று இரவு சென்னை காமராஜர் சாலையிலிருந்து சிவாஜி சிலை அகற்றும் பணி தொடங்கி, சில மணி நேரத்தில் முழுவதுமாக அங்கிருந்து அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட சிலை, அதே சாலையில் வேறு இடத்தில் நிறுவப்படுமா அல்லது சிவாஜி மணிமண்டபத்துக்குக் கொண்டுசெல்லப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.
பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்களும் சிவாஜி சிலையை மெரினா கடற்கரையிலேயே வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விகடன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக